மகிந்தவின் மோசடிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!

மகிந்த ராபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த விசாரணை மந்தகதியில் செல்வதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றை விசாரிக்க விசேட நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது.

நீதியமைச்சர் தலதா அத்துகோரளவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த யோசனை முன்வைக்கப்பட்டதோடு, இதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் மந்த கதியிலேயே செல்கின்றதென தற்போதைய அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இது, முன்னாள் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் செயலென மக்கள் விடுதலை முன்னணி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகின்றது.

இவ்வாறான பின்னணியில், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளை ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்திற்கு மாற்றி, துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்