பாகிஸ்தானில் குண்டுகாயங்களுடன் 15 பேரின் உடல்கள் மீட்பு

பாகிஸ்தானில் புலோடா என்கிற இடத்தில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கி குண்டு காயங்களுடன் 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் ஈரான் நாட்டின் எல்லையையொட்டி உள்ள புலோடா என்கிற இடத்தில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கி குண்டு காயங்களுடன் 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அங்கு ஒரு சில ஆவணங்களும் கிடைத்தன.

அவர்கள் 15 பேரும், பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்து உள்ளனர் என்பது அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. இவர்கள் 15 பேரும் மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக நேற்று முன்தினம் போலீசில் வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்டர்புடைய செய்திகள்
“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” என முன்னாள் பிளேபாய் பத்திரிகை மொடல் அழகி கரேன் மெக்டோகல் கூறியுள்ளார். அமெரிக்க
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா பதவி விலகியதையடுத்து அடுத்த அதிபராக சிரில் ரமபூசா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
சீனாவின் கவுண்டாங் மாகாணத்தில் டாங்கவுண் என்ற மிகவும் பரபரப்பாக இயங்கும் புகையிரத நிலையத்தில் பயணிகளின் லக்கேஜ்கள், கைப்பைகளை சோதனை செய்வதற்கு

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*