எந்தவொரு இரகசிய முகாம்களும் இல்லையாம்!

காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடைய முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட செயலாளர்களூடாக புதிய விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் அந்த தகவல்களை திரட்டுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றரிக்கை அனுப்புமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

குறித்த தகவல்கள் காணாமல் போனவர்களின் அலுவலகம் மற்றும் காணாமல் போனவர்களின் ஆணைக்குழு ஊடாக மீண்டும் விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் எந்தவொரு இரகசிய முகாம்களையும் நடத்தவில்லை என்றும், எந்தவொரு நபரையும் இரகசியமான முறையில் தடுத்து வைக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களினதும் பிரச்சினைகள் சம்பந்தமாக திறந்த மற்றும் நியாயமான தீர்வு வழங்குவதற்கு தான் உள்ளிட்ட அரசாங்கம் அரப்பணிப்புடன் இருப்பதாக இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்