புலிநீக்க அரசியலில் ஜனநாயப்போராளிகள் கட்சி!

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் புலிநீக்க அரசியல் மும்முரமாக பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையினில் ஜனநாயகப்போராளிகள் கட்சியும் அதன் பங்காளிகளாகியுள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
ஜனநாயகப்போராளிகள் கட்சி ஏற்பாட்டினில் அண்மையினில் புதுக்குடியிருப்பில் மாவீரர்கள் பெற்றோர் கௌரவிப்பு நடத்தப்பட்டிருந்தது.அங்கு மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு விடுதலைப்புலிகளின் வரிச்சீருடையை அகற்றிவிட்டு பொதுவான சிவில் உடை அணிவித்து அஞ்சலி நடத்தப்பட்டிருந்தது.

மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அது அமைந்திருந்ததாக மற்றொரு போராளி சீற்றத்துடன் கருத்துக்களை முன்வைத்திருந்தார். இது தொடர்பான பதிவை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தார். அதன் போது விடுதலைப்புலிகளின் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களை அடையாளப்படுத்தும் வரிச்சீருடையை அகற்றுவது பொருத்தமற்ற விடயம் என சுட்டிக்காட்டியிருந்தார்.

அதற்காக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர் ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.பொது வெளியல் ஜனநாயகப்போளிகள் கட்சியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பொது வெளியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

அண்மைக்காலமாக புதிய அரசு புலிநீக்க அரசியலை தமிழரசு மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் ஊடாக முன்னெடுத்துவருவது பகிரங்கமாக பேசப்பட்டு வந்தது.புலிக்கொடி தேவையில்லை,புலிச்சீருடை புகைப்படங்கள் கூடாதென அப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதே வேலை திட்டத்தை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகமும் முன்னெடுத்துவருகின்றது.எனினும் தமிழ் மக்கள் மனதில் அம்முயற்சி பற்றிய விழிப்புணர்வு அற்ற நிலையே காணப்படுகின்றது.

இந்நிலையினில் ஜனநாயகப்போராளிகள் கட்சியும் புலிநீக்க அரசியலில் ஈடுபட்டுள்ளமை அவர்களது பின்புலம் தொடர்பில் சந்தேகங்களை வலுக்க செய்துள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்