மகளுக்கு வேலை வாய்ப்பு கேட்டு படியேறிய மாவை!

தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மகளுக்கு இலங்கை மத்திய வங்கியில் வேலை வாங்குவதற்காக வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழுத்தம் பிரயோகித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலைவாய்பற்றிருக்கும் நிலையில் அதுதொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்காது வரவு செலவுத்திட்டத்தில் அதனை ஒரு நிபந்தனையாகக் கூட முன்வைக்க முன்வராத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் கல்விகற்றுத்திரும்பியிருக்கும் தனது மகளுக்காக வங்கி வேலைவாய்ப்புக்கோரி வரவுசெலவுத்திட்டத்தை ஆதரிக்கவைத்தமை மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்திருந்தார். அதன்போது தான் பல விடயங்களை பேசியதாகவும் அதனால் நல்லிணக்கத்தின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தமான நிலைமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது உண்மையில் என்ன நடந்தது என்ற தகவல்கள் தற்போது வெளிக்கசிந்துள்ளது.
‘நீங்கள் நல்லதொரு வரவுசெலவுத் திட்டத்தினை முன்வைத்திருக்கின்றீர்கள். உங்களுக்கு எனது நன்றிகள். பாராட்டுக்கள் என்று கூறிவிட்டு உங்களுடன் ஒரு தனிப்பட்ட விடயத்தினைக் கோர வேண்டும் என்று குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுள்ளார்.
அதன்போது மங்களவும் கூறுங்கள் நிச்சயமாக செய்வேன் என்று பதிலளிக்க, எனது மகன் இந்தியாவில் பி.கொம் படித்தவர். தற்போது நாடு திரும்பியுள்ளார்.
அவருக்கு வங்கியில் ஒரு வேலைவாய்ப்பினை வழங்க முடியுமா? என்று கோரியுள்ளார். அதிலென்ன இருக்கின்றது. நிச்சயமாக செய்து தருகின்றேன். பயோடேட்டாவைத் தாருங்கள் பார்கின்றேன் என்றுள்ளர்.

இதனையடுத்தே குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் வரவு செலவுத்திட்டத்திற்கு
ஆதரவளிக்கும் முடிவில் இறுக்கமாக இருந்து ஏனையவர்களுக்கும் அழுத்தமளித்துள்ளாராம்.

ஏற்கனவே தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமெரிக்காவில் கல்விகற்றுத்திரும்பிய தனது புதல்விக்கு இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு கோரியிருந்தார். பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அலுவலகமான பிரதமர் அலுவலகத்தில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் மகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்