முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர்நாள் நினைவேந்தல் !

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இறுதியாக வீரர்களை விதைத்த மாவீரர் துயிலுமில்லமாக காணப்படும் இந்த துயிலுமில்லம் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கே இறுதிப்போர் உக்கிரமடைந்த காலபகுதியில் பல நூற்றுக்கணக்கான மாவீரர்கள் விதைக்கப்ட்டிருந்தனர்.

இந்த நிலையில் முதன்முறையாக இந்த வருடம் முள்ளிவாய்க்கால் மக்கள் ஒன்றிணைந்து இந்த துயிலுமில்ல வளாகத்தினை துப்பரவு செய்து ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்துவருகின்றனர்.இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி மிகவும் உணர்வெளிச்சியுடன் இங்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதேவேளை இதற்க்கு அன்மையாகவுள்ள இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர்நாள் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு
வலி வடக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிக அருகில் மதத்தின் பெயரால் நடைபெற்றுள்ள இன ஆக்கிரமிப்பு அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்
14.4.2018 சனிக்கிழமை நடைபெற்ற 28 ஆவது ஆண்டுவிழா 120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*