கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு சொந்தமானது – உரிமைகோரும் சீனா

கல்வான் பள்ளத்தாக்கு தங்கள் நாட்டின் எல்லைக்குள் அமைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், இரு படைகளுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.. லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதல் காரணமாக […]

ஆனையிறவில், ஒரே இரவில் மூவாயிரம் படையினரை கொன்றொழித்தோம் – தமிழினத் துரோகி கருணா

யுத்தத்தின்போது ஒரே இரவில் இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் வரையான சிறிலங்கா படையினரை தாம் கொன்றொழித்தார் என தமிழினத் துரோகி கருணா தெரிவித்துள்ளார். சிங்கள அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக இருந்துகொண்டு, தேர்தலில் போட்டியிடும் அவர் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்வதற்காகவே இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை விட கருணா அபாயமானவர் என கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் இரண்டாயிரம் தொடக்கம் […]

த.தே.கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? சம்பந்தனில் பதில்

மக்கள் விரும்பும் ஒருவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவு செய்வோம் என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சம்பந்தன், தமிழ் மக்களால் நன்கு விரும்பப்படும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரு வரைத் தான் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவு செய்வோம் என்று கூறினார்.

சிறிலங்கா இராணுவத்திற்கு பசுப்பால் விற்பனை செய்வதற்கான யோசனை நிராகரிப்பு

சிறிலங்கா இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு நிராகரித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை எங்களிடம் முன்வைத்தது என தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் எனினும் இலட்ச்சக்கணக்கில் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை இராணுவத்திற்கு பால்விநியோகம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை நிராகரித்துவிட்டார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். […]

மாற்று அணி என்பது காலத்தின் தேவையால் சுயமாக உருவாவது – பனங்காட்டான்

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே சுதந்திரக் கட்சி உருவானது. தமிழ் காங்கிரசில் இருந்துதான் தமிழரசுக் கட்சி பிறந்தது. சுதந்திரக் கட்சியிலிருந்து மகிந்தவின் பொதுஜன பெரமுனவும், ஜே.வி.பி.யிலிருந்து விமல் வீரவன்சவின் ஜே.என்.பி.யும் உருவாகின. ராவுப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரசிலிருந்தே றிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் உருவானது. இதனை மறந்து விக்கினேஸ்வரனின் தேசியக் கூட்டணியையும், கஜேந்திரகுமாரின் தேசிய முன்னணியையும் மக்கள் தோற்கடிக்க வேண்டுமென கூட்டமைப்பு ஏன் கோருகிறது? இலங்கைத் தேர்தல் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஒரு வாரம் முடிந்தாகிவிட்டது. அடுத்த […]

சுமந்திரனின் துரோகம்:போட்டுடைத்த தவராசா!

தனக்கு கிடைத்திருக்க வேண்டிய ஜனாதிபதி சட்டத்தரணி பதவியினை எம்.ஏ.சுமந்திரன் தட்டிப்பறித்திருப்பதாக முன்னணி சட்டத்தரணியான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கி செவ்வியில் இதனை தெரிவித்துள்ள தவராசா 2017ம் ஆண்டில் ஜனாதிபதி சட்டத்தரணி பதவிக்காக தனது பெயர் பட்டியலில் இருந்ததாக தெரிவித்த அவர் ஆனால் இறுதியில் அது நீக்கப்பட்டு சுமந்திரனின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். அதே போன்று தற்போது தேசியப்பட்டியலில் முதலாவதாக தனது பெயர் இருந்திருந்த நிலையில் அதுவும் தூக்கியடிக்கப்பட்டு சுமந்திரனால் அம்பிகா பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் புலனாய்வாளன் தற்கொலை!

தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கல்முனை பொலிஸ் நிலையத்திற்குள் இயங்கும் தேசிய புலனாய்வுத்துறையின் காரியாலயத்தில் கடமையாற்றும் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேரந்த கமல்ராஜ் (21) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

ஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்?

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். மூதூர், சேருநுவர பகுதிகளில் தனியார் நிதி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட சில இளைஞர்களின் முகநூல் கணக்குகளை புலம்பெயர் தமிழர் ஒருவரது சிங்கள இனவாத ஊடகம் காட்டிக்கொடுத்திருந்தது. தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், தமிழீழ வரை படம், மற்றும் புலிகளின் படங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்ததாக, செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆயினும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு மற்றும் நினைவேந்தல் தொடர்பிலேயே அவர்கள் […]

இனப்படுகொலை தொடர்கின்றது: சி.வி!

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் சென்ற முன்னாள் முதலமைச்சர் சி.வி;.விக்கினேஸ்வரன் கேரதீவில் வைத்து படையினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து யாழ்.திரும்பிய அவர் யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றிய பின் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில் முள்ளிவாய்க்காலில் 11 வருடங்களுக்கு முன்னர் எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட இன அழிப்பின் வலிகள் ஒருபுறம், நீதி கிடைக்காத ஏமாற்றம் ஒருபுறம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த […]

முன்னணிக்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இன படுகொலையின் நினைவு நாளான இன்றையதினம் மாலை அல்லப்பிட்டிபுனித பிலிப்னேரியர் தேவாலையத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 100 ற்கும் மேற்பட்ட பொது மக்களின் நினைவாகவும், காணாமல் ஆக்கப்பட்ட ஜிம்பிராவுன் பாதிரியாரின் நினைவாகவும் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. இராணுவம், பொலிஸார் குறித்த அஞ்சலி நிகழ்வினை நடத்துவதை தடுப்பதற்கு சில முயட்சிகள் மேற்கொண்டிருந்த போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் குறித்த […]

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது!

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளது. 166 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 473 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 135 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. 8 […]

சீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் சீனாவிலும் அதன் இரண்டாவது பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் அதிகாரம்மிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழுவில் கலந்துகொண்டு பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் சீனர்களால் இந்த ஆபத்து ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நாட்டில் மீண்டும் கொரோனா தாக்கம் வரக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அரச செய்தி நிறுவனமான ஷின்ஹுவா (Xinhua) தெரிவித்துள்ளது. கொரோனாவின் […]