வெள்ள அனர்த்தம் -பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சிறீலங்கா பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள நீர் வழிந்தோடிவரும் நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக, இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 22569 குடும்பங்களைச் […]

வெகு சிறப்பாக நடைபெற்ற வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா – 2018!

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசாரப் பேரவை நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா – 2018 நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. பருத்தித்துறையில் அமைந்துள்ள வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 18/12/2018 காலை 9.30 மணியளவில் நடைபெற்றுள்ள இந்நிகழ்விற்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு சு.முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கலாசாரப் […]

வடமராட்சியில் விடுதலைப் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டிகள்

யாழ்.வடமராட்சி பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளது. வல்லைவெளி முனியப்பர் வீதியில் இவற்றைக் காணக் கூடியதாகவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் புலனாய்வுப் பிரிவு இதற்கு உரிமை கோரியுள்ளது. போர் மௌனித்ததே தவிர,போராட்டம் சாகவில்லை எனவும், தழிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டியும் சுவரொட்டியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு

மகிந்த ராஜபக்சவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும், கட்சி தாவி, அமைச்சர் பதவிகளைப் பெற்றிருந்தனர். […]

தேசத்தின் குரலுக்கு யாழ் பல்கலையில் நினைவேந்தல்!

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளரும் தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்ம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுள்ளது. யாழ் பல்கலைக் கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சமகால அரசியல் கருத்தரங்கத்தின் போதே தேசத்தின் குரலுக்கு நினைவேந்தல் செய்யப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக் கழக கைலாசபதி அரங்கில் இன்று மதியம் 2.30 மணியளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கானது தேசத்தின் குரலுக்கான நினைவேந்தல் நிகழ்வுடன் ஆரம்பித்திருந்தது. மேடையில் வைக்கப்பட்டிருந்த தேசத்தின் குரல் […]

இந்திய அமைதிப்படை வீரர்கள் கட்டி வழிபட்ட முருகன் கோவில் ஈழத்தில் கண்டுபிடிப்பு!

இந்திய அரசின் பிராந்திய வல்லாதிக்க நிலையை வலுப்படுத்தும் நோக்கில் தமிழீழ மண்ணில் அமைதிப்படையாக கால்பதித்து ஆக்கிரமிப்புப் படையாக மாறிய

கண்ணீரில் கலந்த முள்ளிவாய்க்கால் மண்!

மக்களின் உணர்வுகளில் கலந்த முள்ளிவாய்க்கால் மண்! தமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்காலில் படுகொயை செய்யப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பொதுச் சுடரினைக் கொடுக்க படுகொலை செய்யப்பட்ட 150,000 மக்களுக்கான பொதுச் சுடர் ஏற்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழர் தாயகப் பகுதியில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

சம்பந்தன் சிங்கள குடியேற்றத்தினை ஏன் எதிர்ப்பதில்லை? இன்று முல்லைத்தீவும் பறி போகுது.

புலிகளின் கொள்கைக்கு எதிர்ப்பான அடிப்படையிலானதுதான் சம்பந்தனின் கொள்கை!

ஜ.தே.கட்சியிடம் இருந்து மட்டுமே அழைப்பு.

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்தேசிய கூட் டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க ஜ. தே.கட்சி மட்டுமே பகிரங்க அழைப்பை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கெதிராக மூக்குடைபட்ட ஈபிடிபி!

தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு போட்டியாக ஈபிடிபியும் பொன்னாலை

ஐ.நாவில் உறுதியளித்த தீர்மானங்கள்; உடனடியாக நடைமுறைப்படுத்த பிரித்தானியா வலியுறுத்து!

மனித உரிமைச் செயற்­பா­டு­கள் தொடர்­பில் ஐ.நாவில் உறு­தி­ய­ளித்த தீர்­மா­னங்­களை இலங்கை