ஈழதேசத்து மன்னவனை பாடிடுவோம்

வல்லவை தந்த வல்லவனே! நீங்கள் சொன்னவை யாவும் தமிழினப் பற்றே! கற்றவை முழுதும் தமிழ் உணர்வே! சிந்தையில் என்றும் நிலைப்பதே தமிழீழமே! வரி உடையில் வாழ்த்திருப்பாய் வரிப்புலியாக பல போர்க்களங்கள் திறந்திருப்பாய் கரிகாலப் பெரு வள்ளலே – நீங்களே கலிகாலம் தகர்க்கும் ஈழ மன்னவனே! மாவீரர் ஒவ்வொருவரையும் நேசிப்பாய் மாதவம் புரிந்த புனிதர்களென பூசிப்பாய் மாறாத கொள்கை கொண்ட தமிழனே! மறவோமா உந்தன் அழகு வதனமதை படை நகர்த்தும் பாணியும் அழகு தடை தகர்க்கும் திறனும் அழகு […]

மாவீரர் நாள் இவ்வாண்டு முப்பது ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்றது.

நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம் அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 25.11.2019 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 அன்பார்ந்த தமிழீழ மக்களே! நாம் எமது தாயகமாம் தமிழீழத்தின் விடுதலைக்காகவும், எமது எதிர்காலச் சந்ததியின் சுதந்திர வாழ்வுக்காகவும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த […]

தமிழ் தேசிய தலைவர் ” மேதகு பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா

” தமிழர் விடியல் கட்சி ” சார்பில் பழனி அருகே கோவை ராமகிருஷணன் தலைமையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கு ம்….. ” தமிழ் தேசிய தலைவர் ” மேதகு பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா துளிகள்….

மாவீரர்களை நினைவுகூர அச்சமின்றி அணிதிரளுங்கள்

மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (23) தெரிவிக்கையில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் மாவீரர் நாள் நினைவுகூரல் தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு பதற்றமான நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால் அவ்வாறான ஒரு பதற்றம் தேவையற்றதாகும். – என்றார்.

மட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி

மட்டக்களப்பில், படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சிரமதானப் பணிகள் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உட்பட பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். வழமை போன்று இவ்வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறுவதற்கான முன்னேற்பாடுகள் பல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இடம்பெற்று வருகின்றன. […]

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) காலை கிளிநொச்சியில் நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பொது உருவப் படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் விடுதலைப் போரில் உயிரிழந்த வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

சிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்!

நடந்து முடிந்த சிறீலங்கா அதிபர் தேர்தலை ஆறு இலட்சத்து நாற்பத்து ஒன்பதுனாயிரத்து நான்கு தமிழ் பேசும் (தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள்) மக்கள் முற்றாக புறக்கணித்துள்ளார்கள். இம்முறை நடைபெற்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு இருபத்தாறு இலட்சத்து இருபத்தொன்பதுனாயிரத்து எண்பது (2,629,080) தமிழ் பேசும் மக்கள் தகுதி பெற்றிருந்தார்கள். எனினும் இவர்களில் ஆறு இலட்சத்து நாற்பத்து ஒன்பதுனாயிரத்து நான்கு (649,004) வாக்காளர்கள் இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களையும் நிராகரித்து சிறீலங்கா அதிபர் தேர்தலை அடியோடு புறக்கணித்துத் தமக்கு சிறீலங்காவின் ஆட்சி முறையில் […]

எம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு

13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (07) சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர். இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது, இந்நிலையில் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்த உங்களது நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, வேட்பாளர் ஒருவரை சுட்டுவது என்றால் நாம் இந்த 13 […]

உத்தரவாதம் வேண்டும் முன்னணி விடாப்பிடி

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? எனும் கேள்வியோடு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், தென்னிலங்கை பிரதான அரசியல் தலைமைகள் தமிழ்மக்களின் கோரிக்கைகள் குறித்து செவிசாய்க்கத நிலையில் தமிழ்மக்கள் எவ்வாறு முடிவு எடுப்பது சிறந்தது என்பது குறித்து முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? இலங்கைத்தீவில் கடந்த பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு […]

நாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை!

இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம். கெஞ்சினோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு […]

கூட்டணியும்-முன்னணியும் ஒன்றிணைவது சாத்தியமற்றதா?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் கூட்டணியும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் பலத்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது.. ‘கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானமேறி வைகுண்டம் போவேன் என்று சொன்னதுபோல்’, தமிழ் மக்களுக்கு இந்த ஆண்டு தீர்வு வருகின்றது, அடுத்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு வந்தே தீரும்புதிய அரசியல் சீர்திருத்தம் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்று அடித்துக்கூறி,கடந்த பத்து […]

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வலே மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் […]