நியூசிலாந்து மண்ணில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019

மாவீரர் நாள்! தமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் விதையாகி போன தியாக வீரமறவர்களை வணங்கிடும் புனித நாள். இப்புனித நாளில் தமிழீழ விடியலுக்காய் சரித்திரமாகி போன வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஓக்லாந்து நகரில் கார்த்திகை 27 ஆம் நாள் Mt Roskill war memorial மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. மாலை 6.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. தமிழ் […]

கஞ்சிகுடிச்சாறு கண்ணீரில் நிரம்பியது

அம்பாறை – கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது நான்கு மாவீரர்களின் தாயரான ஏரம்பு செல்லம்மா பொதுச் சுடரினை ஏற்றிவைத்துள்ளார். கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருமளவான தாய்மார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்ணீருடன் உயிர்நீத்த தமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முழங்காவில் துயிலும் இல்ல நினைவேந்தல்

கிளிநொச்சி – முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிழக்கு பல்லை வளாகத்தில் எழுச்சி நினைவேந்தல்

மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய மாவீரர் தினம் இன்று (27) கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவ தடையை மீறி அஞ்சலி!

தென்மராட்சி – கொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு பல இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதற்கமைய கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக நினைவேந்தலை நடாத்த முற்பட்டபோது இராணுவத்தினர் தடையை ஏறபடுத்தியுள்ளனர். ஆயினும் தடைகளைத் தாண்டி குறித்த இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வு எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

சிவாஜிலிங்கம் தலைமையிலும் நினைவேந்தல்!

மாவீரர் தினத்தை முன்னிட்டு தனது சுடரேற்றல் பயணத்தை கே.சிவாஜிலிங்கம் ஆரம்பித்துள்ளார்.முன்னதாக யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக இராச பாதை வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணியில் தற்போது படையினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைந்துள்ளனர் .இதனாலேயே […]

தடை தாண்டி யாழ்.பல்கலையில் மாவீரர் தினம்!

இலங்கை அரசினது தடைகளை தாண்டி யாழ்.பல்ககையில் மாவீரர்களிற்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைகழகவளாகத்தில் உள்ள மாவீரார் நினைவு தூபியில் மாவீரார் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் பல்கலைக்கழக மாணவார்கள் நேற்றைய தினமே மேற்கொண்டிருந்தனர். எனினும் இன்று மாணவர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.எனினும் காவல் தடைகளை தாண்டி உள்ளே புகுந்த மாணவர்கள் நினைவு தூபி பகுதியில் சுடரேற்றி மலர் தூவி தற்போது அஞ்சலித்துக்கொண்டிருக்கின்றனர். மாவீரார் நாள் நினைவேந்தல் வடகிழக்கு மற்றும் புலம்பெயார் தேசங்களில் உணர்புபூர்வமாக அனுட்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் […]

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – பிரித்தானியா

ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கிங்ஸ்பெரி லண்டன் எனும் இடத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாவீரர் நினைவுகளை சுமந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பொதுச் சுடரினை மாங்குள சமரில் வீரகாவியமான லெப்.அழகு அவர்களின் சகோதரி சங்கேஸ்வரி ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கொடியினை வீரவேங்கை லெப்.கேணல் மனோஜ் அவர்களின் […]

யாழ் பல்கலையில் தேசியத்தலைவர் பிறந்தநாள்

தமிழீழத் தேசியத் தலைவரின் 65வது அகவை தினத்தினை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரத்தியேகமாக கொண்டாடியுள்ளனர்.

மாவீரர் தின எழுச்சிக்கு தயாராகின்றது தேசம்:சலசலப்புக்கள் வேண்டாம்!

மாவீரர் தினத்தை குழப்ப முற்படுகின்ற சிறுசம்பவங்களை முன்னிலைப்படுத்த வேண்டாமென பகிரங்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 27ம் திகதிய மாவீரர் தினத்தைய நிகழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் தூண்டல் நடவடிக்கைகள் தொடர்பில் முன்னுரிமை வழங்கவேண்டாமென ஊடகங்களிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே முள்ளிவாய்க்காலில் மாவீரர் இ துயிலுமில்ல துப்பரவு பணியில் ஈடுபட்ட உழவு இயந்திர உரிமையாளர் இன்றையதினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். நாளை மறுதினம் மாவீரர் தினம் இடம்பெறும் நிலையில், மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே […]