ருவாண்டா இனப்படுகொலையில் ஈடுபட்ட முன்னாள் மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறை!!

ருவாண்டா இனப்படுகொலையில் ஈடுபட்ட முன்னாள் மருத்துவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 1994 ஆம் ஆண்டு டுட்ஸி இனப்படுகொலையில் ஈடுபட்டதற்காக ருவாண்டாவின் முன்னாள் மகப்பேறு மருத்துவர் சோஸ்தென் முனியேமனா (Sosthene Munyemana) 24 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இனப்படுகொலை நடந்து சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வந்துள்ளது. 68 வயதான சோஸ்தென் முனியேமனா இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஒரு இனப்படுகொலைக்கு உதவியது ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டார். […]

GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் […]

சம்மந்தனின் ஒரு முகமூடியே உலக தமிழர் பேரவை!

உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடை முறைப்படுத்த கோருவதும் இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கம் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசய மக்கள் முன்னணி கட்சி செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக […]

பொதுநிதி செலவினத்துக்கு பொறுப்புக்கூறாத இராணுவம் மனித உரிமை மீறலுக்கு எப்படி பொறுப்புக்கூற வைப்பது? அம்பிகா சற்குணநாதன் கேள்வி

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பொது நிதிசார் செலவினங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர்களை எவ்வாறு பொறுப்புக்கூறவைக்க முடியும் என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் கல்வி மற்றும் சுகாதாரத்துறையுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுவருவது குறித்து பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கு 423 பில்லியன் […]

பொலிஸாரின் தவறான செயற்பாடுகளால் சித்திரவதைக்குள்ளாகுகின்றனர் மக்கள்! இரா.சாணக்கியன்

ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த 27 ஆம் திகதி மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் தினத்தற்கு மாவீரர்களை நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் விடுதலைப் […]

இமாலயப் பிரகடனம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? நிலாந்தன்!

நோர்வீஜிய மத குருவாகிய அருட் தந்தை.ஸ்டிக் உட்னெம்-Fr.Stig Utnem-. இலங்கைத தீவின் நல்லிணக்க முயற்சிகளில் மதத்தலைவர்கள் பங்களிப்புச் செய்யலாம் என்று சிந்திப்பவர்.அதற்காக உழைப்பவர்.2014இல் நான் நோர்வேக்குச் சென்றபொழுது அவரைச் சந்தித்தேன்.இலங்கையில் திருச்சபைகளின் பங்களிப்போடு இன நல்லிணக்க முயற்சி ஒன்றினை முன்னெடுக்கவிருப்பதாக அவர் என்னிடம் சொன்னார்.அதற்கு நான் சொன்னேன்,நல்ல விஷயம்.ஆனால் நல்லிணக்க முயற்சிகளை திருச்சபைகளில் இருந்து தொடங்குவதற்கு பதிலாக விகாரைகளில் இருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று.ஏனென்றால் யுத்தம் அங்கிருந்துதான் தொடங்குகின்றது.எனவே அங்கிருந்துதான் சமாதானமும் தொடங்க வேண்டும்.மாறாக திருச்சபைகளில் […]

கஜேந்திரகுமாரை திருப்பி அனுப்பிய சிங்கள காடையர்!

திம்புலாகல, திவுலபத்தனை கிராமத்திற்கு சென்ற தமிழ் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக அக்கிராம மக்கள் குழுவொன்று வளமண்டி பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இன்று (15.12.23) காலை சென்ற நாடாளுமன்ற உறுப்பினரை பயணிக்க அனுமதிக்கவில்லை, சுமார் ஒன்றரை மணி நேரம் வளமண்டி பாலத்திற்கு அருகில் வாகனத்துக்கு உள்​ளேயே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிராம மக்களின் கூச்சல்களுக்கு மத்தியில் திரும்பிச் சென்றார். அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் பொல்கஹ அரவ பிரதேசத்தைச் […]

இரணைமடுவைச் சுற்றியுள்ளோர் அவதானம்!

இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து அதிகமாக இருப்பதால் இன்று இரவு தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் குளத்தின் வான் கதவுகள் பாதுகாப்பு கருதி திறக்கப்படும். இவ்வாறு கதவுகள் திறக்கப்படும் போது சிறிய அளவிலான திறப்புகளே இடம்பெறும். இதனால் பாரிய அனர்த்தங்கள் எதுவும் ஏற்படாது. இருந்த போதிலும் குளத்தின் கீழ் பகுதியில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் குற்றவாளிக்கு இந்தியா வரவேற்பு!

ஜெனரல் சவேந்திர சில்வா டெல்லியில் இருந்து இந்தியாவின் டெஹ்ராடூனுக்கு பயணிப்பதற்கு இந்திய விமானப்படை வசதி செய்து கொடுத்துள்ளது. சவேந்திரசில்வா தனிப்பட்ட சொகுசு விமானத்தில் பயணிப்பது பற்றி தென்னிலங்கையில் சர்ச்சைகள் மூண்ட நிலையில் இந்தியா விளக்கமளித்துள்ளது இந்திய இராணுவ அக்கடமியில் (IMA) நடைபெற்ற பாசிங் அவுட் அணிவகுப்பில் அவர் கடந்த 9 ஆம் திகதி பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நிலையில் இந்தப் பயணம் இருந்தது. இந்திய விமானப்படை, விஐபிகளுக்கான நிலையான நெறிமுறையின்படி, இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் […]

இரகசியமாக ரணிலை சந்தித்த தமிழரசு கட்சியின் இரு உறுப்பினர்கள் !

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர் ஜனாதிபதி ரணிலை சந்தித்த பின்னராக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தனித்து ரணிலை சந்தித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை முன்னதாக எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் உலகத்தமிழர் பேரவையினர் நேற்றைய தினம் சந்தித்துள்ளனர். இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் இருவரும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் வரவு செலவுத்திட்ட வாக்களிப்பிற்கு முன்னதாக எம்.ஏ.சுமந்திரன், மற்றும் இரா.சாணக்கியன் […]

யாழில்.புளியமரங்களை நட பணிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் பயன்தரு புளியமரம் நாட்டியதாக வரலாறு இல்லை. தற்போது உள்ள புளியமரங்கள் எல்லாமே இயற்கையாக விதை மூலம் பரவியதே. அவையும் தற்போது வெட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது நாட்டுக்கு தேவையான புளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு […]

கிளைமோர் தயாரித்தார்கள் என முன்னாள் போராளி உள்ளிட்ட இருவர் கைது

கிளைமோர் குண்டு தயாரித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் முன்னாள் போராளியை மேலதிக விசாரணைக்கு என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளனர். மற்றையவர் கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான ஆரோக்கியநாதன் சவேரியன் (வயது 48) என்பவரும் அவருக்கு உதவியதாக நாச்சிகுடா பகுதியை சேர்ந்த தம்பு குணசேகரம் […]