தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புற்பாய்த்தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது!  

தமிழீழ விடுதலைப்புலிகளால் வாதரவத்தை பகுதியில் நிர்வகிக்கப்பட்டு வந்த ஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை இன்று வடமாகாண மகளிர் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்றஅமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும்!

சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ, அதேபோல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 வது ஆண்டு நினைவு நாள்!

1974 ம் ஆண்டு ஜனவரி 3 ம் திகதி தொடக்கம் 10 ம் திகதி வரை தமிழ்மக்கள் தமது மொழி,பண்பாடு என்பவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதை அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் விரும்பவில்லை. அரசாங்கம் இதனை ஏற்றுக் கொள்ளாமல் கொழும்பில் நேரடியாகவும் யாழ்ப்பாணத்தில் மாநகர மேயர் ஊடாகவும் தொடர்ச்சியான தடைகளை ஏற்படுத்தியது. அத்துடன் மாநாடு நடைபெறுவதற்கான முக்கிய அரங்குகளின் அனுமதி இறுதி நேரம வரை […]

வடக்கில் விசேட பொலிஸ் குழுவை உருவாக்குமாறு முதலமைச்சரிடம் மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் கன்ரர் ரக வாகனம் மோதி விபத்து!

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் பிரசாந்த்  வேலைக்கு செல்லும் வழியில் வல்லை – அச்சுவேலி சந்தி பகுதியில் கன்ரர் ரக வாகனம் மோதி இன்று(07-12-2017) காலை விபத்தில் சிக்கியுள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் வரதர் அணி இணையும்?

தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் எணி எனப்படும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான அணி இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைக்கு பெருமை  சேர்க்கும் மாணவர்கள் பாடசாலையினால் புறக்கணிப்பு!

யா வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை நிர்வாகம் ,மற்றும் அதிபர் ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்கம் , பழைய  மாணவர் சங்கம்,வாதரவத்தை கல்வி முன்னேற்ற கழகம் போன்ற நிர்வாகங்ளால் பாடசாலைக்கு  பெருமை  சேர்க்கும்  மாணவர்கள்  புறக்கணிக்கப்படுவதாக குறித்த மாணவர்களின் உறவினர்களால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் தொடர்பாக மனம் திறந்த பொட்டு அம்மான்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.

நல்லாட்சி அரசின் காணிபிடிக்கும் தந்திரம் கிளிநொச்சியில்!

நல்லாட்சி அரசின் வன்னியை தாரைவார்க்கும் புதிய திட்டத்தின் கீழ் சிங்களவர் ஒருவர் கஜீ பண்ணை அமைக்க மேலும் 600 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிவழங்கியுள்ளது.

நீராகாரத்தையும் நிறுத்த தமிழ் அரசியல் கைதிகள் முடிவு!

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் இன்று தொடக்கம் நீராகாரத்தையும் நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.

ஏ-9 வீதியில் போக்குவரத்தை முடக்கிய மக்கள்!

வவுனியா பன்றிக்கெய்தகுளம், மரையடித்தகுளம் பகுதியிலுள்ள 45 இந்திய வீட்டுத் திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுக்கு சிக்கல்!

தேர்தல்களின் போது அரசியல்வாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி குறித்து கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.