என்கவுண்டர் விவகாரம் : தன்னையும் கொன்றுவிடுங்கள் என கர்ப்பிணி பெண் கோரிக்கை!

பாலியல் வன்புணர்விற்கு பின் படுகொலை செய்யப்பட்ட பிரியங்கா ரெட்டியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட சின்னகேசவலு என்பவரின் கர்ப்பிணி மனைவி தன்னையும் கொன்று விடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் குறித்த பெண் நேற்றைய தினம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. தன் கணவன் இன்றி தன்னால் வாழ முடியாது எனத் தெரிவித்துள்ள குறித்த பெண், சின்னகேசவலுவின் உடலை […]

தொடர்கின்றது அடைமழை:பாதிப்பு அதிகரிக்கலாம்?

வடக்கு மாகாணத்தில் கொட்டுத் தீ்ர்த்த அடை மழை காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களுலும் 17 ஆயிரத்து 598 குடும்பங்களைச் சேர்ந்த 60 ஆயி்த்து 676 பேர் பாதிப்படைந்துள்ளதோடு ஆயிரத்து 914 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 430 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் உறுதி செய்கின்றன. தற்போது நிலவும் பருவ மழையின் காரணமாக அதிக நீர் வரத்தின் காரணமாக வடக்கின் பாரிய நீர்த்தேக்கமான இரணைமடுக் குளத்துன் வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையிலும் ஏனைய குளங்களும் […]

கழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி

தமிழர்களுக்கு கழுத்தறுப்பு சைகை காட்டிய வழக்கில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என்பது பிரித்தானிய நீதிமன்றில் இன்று (06) நிரூபிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு லண்டன் உயர்ஸ்தானிகர் அகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என்று சைகை காட்டி கொலை அச்சுறுத்தல் குற்றச்சாட்டுக்குள் பிரியங்கா பெர்னாண்டோ சிக்கியிருந்தார். அவருக்கு எதிரான வழக்கு பிரித்தானிய நீதிமன்றத்தில் நீண்டகாலம் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என்பது பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் […]

சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்

இறையாண்மை கொண்ட நாடு என்ற சிறிலங்காவின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தமது கீச்சகப் பதிவு ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர், “ இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலகளாவிய சக்திகளை- உங்கள் நம்பிக்கையை வைத்து, எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன். அதேவேளை, ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக எங்கள் தனித்துவமான அடையாளத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் […]

மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்

மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அமெரிக்க தூதுவர் அலைய்னா பி டெப்லிட்ஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, தேசிய பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய இரா சம்பந்தன் , மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த […]

யாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது

யாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர், காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று (வியாழக்கிழமை) அவரை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். 1 லட்சம் ரூபாய் மற்றும் 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலும் முன்னெடுத்து வருகின்றனர்.

கோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூக்கா

கோட்டாபய ராஜபக்ஷ வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா ஒரு நாள் கோட்டாபயவுடன் அவருக்கு உதவியவர்களும் பொறுப்புக்கூறும் நிலையேற்படும் என தெரிவித்துள்ளார்.இந்த தாமதம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக நீண்டநாள் காத்திருக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த 11 பேர் தங்கள் வழக்குகளை தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளதாக […]

சஜித்தை நியமிக்கும் ஐதேக முடிவை சபாநாயகர் ஏற்றார்

இலங்கையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை சபாநாயகர் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று மாலை எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சஜித் பிரமேதாசவை எதிர்க்கட்சித் தலைவராக்க கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையிலேயே அக்கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்படி ஜனவரி 3ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விடுதலை:பொய்யான செய்தி!

தமிழ் அரசியல் கைதிகள் சிலர் ஜனாதிபதி கோத்தபாயவின் சிபார்சின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது பொய்யானதென தெரியவந்துள்ளது. அவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை என்று அரசியல் கைதிகளது குடும்பங்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசியல் கைதிகள் எனக் குறிப்பிட்டு சிலர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கும் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளுக்கும் தொடர்பில்லை எனவும் அரசியல் கைதிகளது குடும்பங்களின்; தரப்பில் இருந்து எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அதிலும் அனுராதபுரம் சிறையிலிருந்து […]

வலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி!

தாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் தீவிரம் பெற்றுள்ளன. வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த புத்திஜீவிகளும் சிவில் சமூக பிரமுகர்களும் கட்சி தலைவர்களும் கடந்த சனிக்கிழமை முதல் விக்னேஸ்வரனுடன் பலமான மாற்று அணி ஒன்றினை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியிலுள்ள […]

நேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள். இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுவரை இருந்துவிட்டு இன்று மாற்று அணியைத் தேடுகின்றவர்கள் ஒன்று சேரும் இடம் இன்னும் ஒரு […]

கடத்தப்பட்ட சுவிஸ் பணியாளர் வெளிநாடு செல்லத் தடை

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரிக்கு வெளிநாடு செல்ல நீதின்றம் தடை விதித்துள்ளது. குறித்த பெண் அதிகாரி எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல முடியாது என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.