குண்டுவெடிப்புகளில் 9 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 185 பேர் பலி – 469 பேர் காயம்

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிந்திக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் மூன்று ஆடம்பர விடுதிகளிலும், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில், ஒரே நேரத்தில் இன்று காலை குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, 469 என்று மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் […]

தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல் – விசாரணைகளில் தெரியவந்தது

சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு பேர் 616ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர். குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர் என்பது கண்காணிப்பு காணொளிப் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது. ஷங்ரி- லா விடுதி குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 […]

புலிகளின் காணிகளை அபகரிக்கும் சிறிதரன்!

விடுதலைப் புலிகளின் காணிகளை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு பெயர் மாற்றம் செய்துவருகின்றார் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்திருந்தன. இந்நிலையில் தனது மகனின் பெயரில் அண்மையில் கிளிநொச்சியில் 10 ஏக்கரிற்கும் அதிகமான நிலத்தினை பெயர் மாற்றம் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. குறித்த காணிகள் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்திருந்த நிலையில் அவற்றினை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே அவை சிறதரனின் மகனின் பெயரிற்கு கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. […]

தேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..

தேச விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல் இன்று காலை 9 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய கேட்போா் கூடத்தில் அனுட்டிக்கப்பட்டது. இதில் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் S. பபில்ராஜ் நினைவேந்தல் உரையினையாற்றினார், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் மலர் மாலை அணிவித்தார், மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் T.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்ற அதனைத்தொடர்ந்து மாணவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றினர்.

கூட்டமைப்பின் தேர்தல் நாடகம் ஆரம்பம்!

தேர்தல்கள் நெருங்கி வருகின்றமையால் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை மக்களை ஏமாற்றுவதற்கான நாடாகங்களாகவே நாம் பார்க்கின்றோம். இந்த அரசையும் குற்றவாளிகளையும் இதுவரை காலமும் இதே கூட்டமைப்பே காப்பாற்றியது.தற்போது அதே அரசாங்கம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையாக நேர்மையாகச் செயற்படுவதாக இருந்தால் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கத் தயாரா என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். வரவு செலவுத் திட்டம் […]

ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழர்கள் நிராகரிக்கவேண்டும்

ஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த உண்மைகளை எமது மக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், போர் முடிவடைந்ததற்கு பிற்பாடு தமிழ்த் தேசம் தன்னுடைய இருப்பிற்காகக் போராடிக்கொண்டிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த […]

1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக – மதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது!

திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக வேகமாக செயல்பட்டு தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. முதலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுணக்கம் காட்டிய திமுக தற்போது அடித்து ஆட தொடங்கி உள்ளது. தமிழகத்தில் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளை எல்லாம் தனது பக்கம் இழுத்து கூட்டணி அமைத்து […]

தமிழர் வரலாற்றையும் – தமிழீழ அரசின் வரலாற்றையும் பாதுகாப்போம்.

தமிழர் வரலாற்றை மீண்டும் புதுப்பித்த விடுதலை இயக்கத்தின் வரலாற்றை அழிக்கும் சிங்கள அரசின் புலி நீக்க அரசியலின் முக்கிய பகுதியாக எமது விடுதலை இயக்கமாகிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் -போராட்ட வரலாறுகள் என்பன திட்டமிட்ட வகையில் மிக விரைவாக அழிக்க பல முயற்சிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஓலைச்சுவடிகள் அழிப்பில் தொடங்கி யாழ்நூலகம் எரிக்கப்பட்ட பின்னரும் தமிழர் வரலாறு அழிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. இதைக் கருத்திற் கொண்டுதான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் […]

கிளிநொச்சி போராட்டத்தில் அடிதடியில் ஈடுபட்ட அடியாட்கள்!

கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்திய இன்றைய மாபெரும் போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் சிலர் கட்சி அரசியல் செய்து, மோதலில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குண்டர்கள் குழுவால் பல்கலைகழக மாணவன் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டனர். அறிவிப்பு பணியில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சேதமாக்கப்பட்டு, ஒலிவாங்கி வயர்கள் அறுத்தெறியப்பட்டன. இந்த அநாகரிக நடவடிக்கையில் தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தலைமையிலான குண்டர்களே ஈடுபட்டதாக பல்கலைகழக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்துவது குறித்து பல்கலைகழக […]

முழு அடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவாக மன்னார் மாவட்டம்!

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (25) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். குறிப்பாக மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் பேரூந்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு,எவ்வித சேவைகளும் இடம் பெறவில்லை. பாடசாலைகளுக்கு குறிப்பிட்ட அளவு மாணவர்கள் சென்றுள்ள போதும், போக்குவரத்து சேவைகள் இல்லாமையினால் அதிகளவான மாணவர்கள் மற்றும் […]

நாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்

வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தி ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற இருக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணையில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால் இந்த போராட்டத்தில் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் தனது கட்சியின் முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் விக்னேஸ்வரன் […]

பாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற போதும், அந்தப் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபரின் ஊடகப் பேச்சாளர், தர்மசிறி எக்கநாயக்க, “ பாதுகாப்புச் செயலரின் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், இராணுவத்துக்கு எதிராக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. சில ஊடகங்கள் அவரது கருத்தை தவறாக வெளியிட்டதால் தான், தவறான […]