நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா!

லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இன்று ராஜ்யசபாவிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பிக்களும் எதிராக 105 எம்.பிக்களும் வாக்களித்தனர். இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் லோக்சபாவில் எளிதாக சட்ட மசோதா நிறைவேறியது. இந்த நிலையில் நாளை ராஜ்யசபாவில் […]

ஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி, எங்கள் பெண்கள், எங்கள் சகோதரிகள், எங்கள் மக்கள் படுபயங்கரமாக, குரூரமாகக் கொலை செய்யப்பட்டனர். ஏதிலிகளாக வந்த அவர்களைப் பற்றி இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை, அவர்கள் குடி உரிமையைப் பற்றி யோசிக்கக்கூட இவர்களுக்கு மனம் இல்லை. இரத்தம் தோய்ந்த கரங்களோடு வந்த இலங்கை அதிபரோடு கை குலுக்கி, கொஞ்சிக் குலாவத்தான் உங்களுக்கு நேரம் இருந்தது. ஈழத்தமிழர்களைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை. இந்தச் சட்டத்தை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள். இவ்வாறு […]

ராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது உண்மைகளை உடைத்த ரகோத்தமன்

ராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CBI அதிகாரி ரகோத்தமன் தமிழக ஊடகமான விகடனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் தெரிவித்துள்ளார். அத்தோடு அவர் இந்தியாமீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் ஆனால் இந்தியாவின் தவறான நடவடிக்கைதான் கோபமடைய செய்தது என பல வரலாற்று உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வை கோட்டாவிடம் இந்தியா வலியுறுத்தும் – விக்னேஸ்வரன்

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தமை குறித்து வாரம் ஒரு கேள்வி பதிலில் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு […]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு – இந்தியா அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்:- ”தமிழ் ஈழத்துக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் நோக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கும், எல்லைப்புற ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கிறது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற பிரிவினை வாதங்களையும், சட்டவிரோதச் […]

இந்தியாவின் மௌனத்தின் பின்னணி – புதுடெல்லியில் இருந்து பரபரப்பு தகவல்கள்

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.

28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு – ராகுல் காந்தி கவலை

சிறிலங்கா உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து,

இலங்கை தமிழ் அகதிகளை ரொஹிங்யா முஸ்லிம்களுடன் ஒப்பிடமுடியாது-இந்தியா

இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரொஹிங்யா முஸ்லிம்களையும் ஒரே மாதிரிக் கருத முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.