அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்துக – ஐ.நா

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுகலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்:- வன்முறைக்கு வழியை ஏற்படுத்தும் தவறான தகவல்களை பரப்பாமல் இருக்க வேண்டிய பொறுப்பினை ஒவ்வொரு பொதுமகனுக்கும் இருக்க வேண்டும். அவசரகால சட்ட நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, அனைத்து சமூகத்தினர் மற்றும் தனிநபர்களின் உரிமைகளை மதிக்கும் விதமாக தகுந்த, பாரபட்சமற்ற […]

அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர்

நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மீண்டும் வெடித்துள்ள கலவரங்களை அடுத்து- தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “படையினரும், காவல்துறையினரும் தமது பணிகளை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வடமேல் மாகாணத்தில் சில குழுக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் சொத்துக்களை அழித்துள்ளனர். நிலைமைகளை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு […]

சற்று முன்னர் கைது செய்யப்பட்ட மற்றுமோர் இயக்கத்தின் தலைவர்!

மஹசொன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் தெல்தெனிய பகுதியில் வைத்து இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இவர் கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற கலவரத்திற்கும் தலைமை தாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டையில் 7 தற்கொலைக் குண்டுதாரிகள் கைது

காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகள் அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் நெருங்கிய உதவியாளர்களாவர். சஹ்ரானின் சகோதரர்களில் ஒருவரே, இவர்களை அம்பாந்தோட்டைக்கு அழைத்து வந்துள்ளார். இவர்களுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் அம்பாந்தோட்டையில் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி நீண்ட நாட்களாக அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, […]

சஹ்ரானுக்கு சொந்தமான வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான வீட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பெற்றுள்ளனர். தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தெமட்டகொட – மஹவில கார்டினில் அமைந்துள்ள வீடே இவ்வாறு பொறுப்பேற்றுகொண்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தனர். இதேவேளை, தற்கொலை குண்டுதாரிகளின் 14 கோடி ரூபாய் பணமும் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு தொகை பணத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் ஏனைய பணத் தொகை […]

தேடுதல் தொடர்கிறது?

இலங்கையின் வடக்கு தெற்கென அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் ஜிம்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு வர்த்தக நிலையங்கள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை தெற்கில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து வெலிமடை போகஹகும்புர பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் வெளிநாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் […]

அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது, சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில், அதனைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், 3 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அவிசாவளையில் உள்ள […]

பலரின் பதவிகளை பறிக்கவுள்ள மைத்திரி-நாளை வெளியாகிறது அறிவிப்பு!

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது என சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேனா தெரிவித்துள்ளார். இன்று மாலை நாட்டு மக்களுக்கு அவர்கள் வழங்கிய உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகளே இவ்வாறு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர் என மைத்திரி மேலும் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது மதத்தின் பெயரால் இந்த தாக்குதலை நடத்துகிறேன் – தற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் சிக்கியது

கொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல், தாக்குதல் நடத்திய நபர்களால் பயன்படுத்தப்பட்ட தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டை, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் சிறப்பு அதிரடிப்படையினரும் முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த ஒரு தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்தார். அதில், மூன்று காவல்துறை அதிகாரிகளும், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளும் […]

திட்டமிட்டு நடத்தியது ஐ.எஸ்! ஆதாரம் படங்கள் வெளியாகியுள்ளது!

இலங்கையில் நடந்த தாக்குதலை திட்டமிட்டு வழி நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. நேற்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இணையம் ஒன்றில் மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் படம் வெளியிடப்பட்டது. அந்த படங்களில் அபு உபைதா, அப்துல்பாரா, அப்துல் முக்தர் ஆகிய 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் ஐ.எஸ். கொடிகளை பிடித்தப்படி நிற்கிறார்கள். இவர்கள் மூவரும் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை படையில் இடம் பெற்று இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

குண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது

சிறிலங்காவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும், ஆடம்பர விடுதிகளிலும், நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. கொழும்பில் 1000 இராணுவத்தினர் இந்த தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1000 இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 24 கைது நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் […]

தெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி

தெமட்டகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெமட்டகொடவில் உள்ள மகாவில வீடமைப்புத் திட்ட, அடுக்குமாடிக் குடியிருப்பில், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் ஒன்றை சோதனையிட முயன்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. காவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்த போது அங்கிருந்த தற்கொலைக் குண்டு தாரி என சந்தேகிக்கப்படும் நபர் குண்டை வெடிக்க வைத்துள்ளார். இதில் மூன்று காவல்துறையினர் உயிரிழந்தனர். இன்றைய குண்டுத் […]