கோத்தா – மோடி ஒரு மணி நேரம் தனியாக பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மதியம் ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இரு நாடுகளின் தலைவர்களுடன் அதிகாரிகள் எவரும் சந்திப்பில் பங்கேற்கவில்லை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவரது உதவியாளர் ஒருவர் மாத்திரம் சந்திப்பில் பங்கேற்றிருந்தார். இதுகுறித்து தமது கீச்சகப் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச, எங்கள் நாடுகளின் இதயங்களுக்கு முக்கியமான மற்றும் நெருக்கமான பல முக்கிய அம்சங்கள் […]

ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கியமை தவறானது – ஜனாதிபதி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு உடன்படிக்கையில் கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டமை தவறானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த ஒப்பந்தம் தொடர்பாக சீன நிறுவனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஆனால் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் போட்டிகளில் ஈடுபட போவதில்லை என்றும் கூறினார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் […]

இன அழிப்பை மறந்துவிடவேண்டுமாம் – கோட்டபாய

பேரினவாதிகளின் (பெரும்பான்மை சமூகத்தின்) மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விஷயங்களை சிறுபான்மையினர் செய்தால் மட்டுமே பெரும்பான்மை சமூகம் எதிர்வினையாற்றும். அதை சிறுபான்மையினர் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் பிறந்தால் எல்லோரும் இலங்கை குடிமக்களே . அவர்களுக்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால் சிறுபான்மையினர் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார் தமிழின அழிப்பு சூத்திரதாரியான கோட்டாபய ராஜபக்ச. இந்தியாவின் பாரத் சக்தி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது […]

அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன் – கோத்தா

அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு தான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று பௌத்த பிக்குகள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையின் படியே நான் செயற்படுவேன். ஒரு நோக்கத்துக்காகவே என்னை மக்கள் தெரிவு செய்தனர். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சில அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கமை, குற்ற வி்சாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் விசாரணைகளை நடத்தினர்” […]

இனப்பிரச்சினைக்கு தீர்வை கோட்டாவிடம் இந்தியா வலியுறுத்தும் – விக்னேஸ்வரன்

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தமை குறித்து வாரம் ஒரு கேள்வி பதிலில் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு […]

கோத்தபாய போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார்!!

ஐனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய ராஐபக்சவின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பன போர் வெற்றிகளில் அல்லது போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார் போன்றதான நிலைப்பாட்டையே எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஐனநாயக அரசியலுக்கு வந்தள்ளதால் போர்காசல் சிந்தனைகளில் இருந்து கோத்தபாய மாற வேண்டுமென்றும் கேட்டக் கொண்டார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டிப் புதைக்க நினைத்தால் அது அவருக்கு பாரதூரமாக அமையுமென்று எச்சரிக்கை விடுத்துள்ள சிறிதரன் தமிழ் மக்கள் […]

கிழக்கில் சோதனை சாவடி!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியை ஒரு தரப்பினர் கொண்டாடிய வேளையில், கல்முனை பகுதியில் வர்த்தக நிலையங்களை மூடப்பட்டதை காணமுடிந்தது. அத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) பிரதான வீதியில் இராணுவ சோதனை சாவடிகள் திடீரென அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினரும் பொலிஸாராரும் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று எட்டாவது நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் சனாதிபதி தேர்தலை முன்னிட்டு இராணுவத்தினர் முன்னர் அமைத்திருந்த சாவடிகளிலிருந்து மீள […]

கோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை!

இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் கோத்தபய ராசபட்சே வெற்றி பெற்று இருப்பது ஈழத்தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரிக்கும் என்பதோடு இந்தியாவிற்கும் பேராபத்தை விளைவிக்கும். சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்புறவு மேலும் பெருகும்.2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கோத்தப்பய ராசபட்சேயும் முக்கிய பொருப்பாவார். அவருடைய வெற்றி ஈழத்தமிழர்களுக்கு மேலும் மேலும் அழிவையும் நெருக்கடியையும் உருவாக்கும்.

தமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ்த்துச் செய்தியில் சி.வி.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகின்றார்கள் எனவும், தேர்தல் முடிவுகள் இந்நாட்டு மக்கள் இன ரீதியாக இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதை வெளிக்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சி.வி.விக்கேஸ்வரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தியில், “நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் இந்நாட்டு மக்கள் இன ரீதியாக […]

சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ச

நடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 13 இலட்சத்து ​60​ ஆயிரத்து 16 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இதன்படி, கோத்தாபய ராஜபக்ச 16 மாவட்டங்களையும், சஜித் பிரேமதாச 6 மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளனர். மொத்த வாக்குகள் கோத்தாபய ராஜபக்ச – 6,924,255 (69 இலட்சத்து 24 ஆயிரத்து 255). சஜித் பிரேமதாச – 5,564,239 (55 இலட்சத்து 64 ஆயிரத்து 239). அநுர குமார திஸாநாயக்க – 4,18553 (4 இலட்சத்து […]

கோத்தபாயவை சிக்கவைத்தார் முன்னாள் கடற்படை தளபதி!

பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் இந்த விவகாரத்தில் சிக்கவைத்துள்ளார் வசந்தகரணாகொட தான் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறிப்பிட்ட மனுவில் அவர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இந்த விவகாரம் குறித்து தெரியும் என குறிப்பிட்டுள்ளார். 11 தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட விடயம்எவ்வாறு இடம்பெற்றது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி தன்மீதான […]

மீண்டும் பாதுகாப்புச் செயலராக கோத்தா?

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார் என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி