மோதலை தவிருங்கள் – சிறீதரன்

இலங்கைத் தமிழரசு கட்சிக்கான தலைமைத்துவ உள்ளக தேர்தல் எதிர்வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் கட்சிக்குள் போட்டியிடுகின்ற எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரை பற்றிய தவறான பதிவுகளை அல்லது பின்னூட்டங்களையோ அன்றி விவாதங்களையோ சமூக வலைத்தளங்களிலும் பொது வெளிகளிலும் மேற்கொள்ளக்கூடாது என தலைமைக்கு போட்டியிடுகின்ற சி.சிறீதரன் அறிவித்துள்ளார். இன்று மாவட்டத்தின் சகல கட்சி அங்கத்தவர்களுக்கும் இறுக்கமான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எக்காரணம் கொண்டும் உள்ளக தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சியினுடைய உறுப்பினர்கள் மீது எதிராகவோ அன்றி வஞ்சனை […]

பாண்டியன்குளம் பிரதேசங்களில் சட்டவிரோத காடழிப்பு-அதிகாரிகள் மௌனம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் சட்ட விரோத காடழிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பிரதேச செயலக அதிகாரிகள் அசண்டையீனமாக இருப்பதாகவும் ,நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு மறைமுக அனுமதி வழங்குவதாக சந்தேகிப்பதாகவும் பிரதேச பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் குறிப்பாக குத்தகை அடிப்படையிலாக காணிகளை பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் குத்தகை அடிப்படையில் கேட்டு கொள்ளும் காணி அளவினை விடவும் மேலதிகமாக காணிசிரமதானம் செய்து வைத்து கொள்ளும் நபர்கள் மீது பிரதேச […]

த.தே.கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? சம்பந்தனில் பதில்

மக்கள் விரும்பும் ஒருவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவு செய்வோம் என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சம்பந்தன், தமிழ் மக்களால் நன்கு விரும்பப்படும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரு வரைத் தான் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவு செய்வோம் என்று கூறினார்.

மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்

மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அமெரிக்க தூதுவர் அலைய்னா பி டெப்லிட்ஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, தேசிய பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய இரா சம்பந்தன் , மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த […]

சம்பந்தனை வெளியேற்றுவதா?ஆராய்கிறது ஜதேக!

தற்போது இரா.சம்பந்தன் பாவனையிலுள்ள எதிர்கட்சி தலைவர் வதிவிடத்தை கேருவதா அல்லது அவரையே அங்கு தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிப்பதாவென ஜக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்துவருகின்றது. கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பயன்பாட்டுக்கு பெற்றுகொடுக்கப்படுமென அறிய முடிகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னாள் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது குறித்த அலுவலகத்தை பயன்படுத்தியிருந்த போதும், இதுவரையில் உத்தியோகபூர்மாக கையளிக்கவில்லை எனவும் தெரிவியவருகிறது. எவ்வாறாயினும் குறித்த அலுவலகத்தை எதிர்வரும் (04) புதனன்று ஐ.தே.கவுக்கு பெற்றுகொடுப்படவுள்ளதாக அறிய முடிகிறது. […]

சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழியவில்லை – சம்பந்தன்

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறு, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாக வெளியான செய்திகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். தாம் யாருக்கும் எப்போதும் அவ்வாறான அறிக்கை வெளியிடவோ, கருத்துக்களைக் கூறவோ இல்லை, இது முற்றிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்விவகாரம் என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் கூறியுள்ளார். “தேர்தலில் வடக்கு, கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெளிவான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு அமைச்சரவையும், சிறிலங்கா அதிபரும் […]

சஜித் தோல்வியடைந்தால் தமிழீழத் தனிநாடு கோருவதற்கு வாய்ப்பு ஏற்படும் – உண்மையைப் போட்டுடைத்த இரா.சம்பந்தன்!

வரும் 16.11.2019 சனிக்கிழமை நடைபெறும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோற்கடிக்கப்பட்டால் தமிழர்கள் தனிநாடு கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமிருப்பதாக இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். நேற்று 13.11.2019 புதன்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திய பொதுக் கூட்டத்திலேயே இவ் இன்ப அதிர்ச்சி அறிவித்தலை இரா.சம்பந்தன் வெளியிட்டதாக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. இக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் அவர்கள் […]

மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன்

மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே பிரச்சினை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு கொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆனதில் தமக்கு பிரச்சினை […]

சிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறதா?

அரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது திரும்பியுள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சி என்ற தகைமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச நேற்று பதவி விலகிய பின்னர், அவரது தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச பணியாற்றுவார் என்று தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகவும், தினேஸ் குணவர்த்தன […]

‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக

அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஐ.நா அதிகாரியுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்பு!

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கத்தயார் – நிபந்தனை விதித்த கூட்டமைப்பு

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர்