தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுமந்திரன், சிறிதரன் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய பேச்சாளராக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும் நாடாளுமன்ற குழுவின் புதிய கொறடாவாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று (21) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்தத் தெரிவுகள் இடம்பெற்றன. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அவரின் இல்லத்தில் […]

கட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்

தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (07.08.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் நாம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளோம் என்பது உன்மை. தமிழ் அரசு […]

சுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் எண்ணும் நிலையத்தில் துரோகி சுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் மீது பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மோசமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அங்கு நின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவின் மகனும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான கலையமுதன் உட்பட பல இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், கலையமுதன் தள்ளி வீழ்த்தப்பட்டு மோசமாக தாக்கப்பட்டார். சுமந்திரனின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரே இவர்களை […]

மக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் துரோகியாக இருந்து தமிழ் மக்களின் தியாகங்களை கொச்சைப்படுத்திய சுமந்திரன் மக்களால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், தற்போது மோசடி முறையில் வெற்றிபெற்றார் என யாழ்ப்பாணம் தேர்தல் வாக்கெண்ணும் நிலைய முடிவுகள் தெரிவித்துள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டதன் அடிப்படையில், ஏற்கனவே சிறிதரனுக்கு அடுத்ததாக, இரண்டாவதாக வெற்றிபெற்றவர் என அறிவிக்கப்பட்ட திருமதி சசிகலா ரவிராஜ் நீக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் மீண்டும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதால் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்து தோற்கடித்து சுமந்திரன் ஐந்தாவது நிலைக்கு […]

சசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி?

நடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்னு இன்றிரவு கொண்டு சென்றுள்ளார். கூட்டடமைப்பின் விருப்பு வாக்கின் படி முதலாம் இடத்தில் சி.சிறீதரனும்,இரண்டாம் இடத்தில் சசிகலா ரவிராஜீம் மூன்றாவது இடத்தில் த.சித்தார்த்தனும் உள்ளனர். இந்நிலையில் சசிகலா ரவிராஜ் வாக்கிi மாற்றி சுமந்திரனை செருக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை […]

சுமா,சிறீயை வெளியே அனுப்புவோம்!

தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர்களின் தியாகங்கள் உண்மையெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் வெளியேற்ற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது யாழ் ஊடக அமையத்தில் 2/8/2020 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் வலிந்து காணாமல் […]

காலில் வீழ்ந்தார் சுமந்திரன்?

கத்தோலிக்க அமைப்புக்களிற்கு பணத்தை அள்ளிவீசுவதன் மூலம் வெற்றியை பெற சுமந்திரன் பாடுபடுவதான மறவன்புலோ சச்சிதானந்தன் போன்றோரின் குற்றச்சாட்டுக்கள் மத்தியில் யாழ்.மறை மாவட்ட பேராயர் அதிவணக்கத்துக்குரிய யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனுடன் சந்திப்பொன்று நடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் முக்கியத்துவம் , அதன் பெறுபேறுகள் தேசிய அரசியலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மற்றும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட களநிலவரம் […]

நான் பதவி விலகுவது என் இஸ்டம்

நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலக வேண்டுமென்று தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், இவ்வாறான கருத்துக்களை எங்கள் மீது […]

நடைபாதை வியாபாரத்திற்கு தடை- சுமந்திரன்

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்பி தெரிவித்தார். யாழ்ப்பாணம் வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பிகள் மாவை சேனாதிராஜா, எம் ஏ சுமந்திரன் மற்றும் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் வணிகர் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது யாழ்ப்பாணம் […]

அமைச்சு பதவிகளை பெறுவோம் – சுமந்திரன்

இலங்கை ஆட்சியாளா்களுடன் இணைந்த அமைச்சு பதவிகளை பெறுவது தொடா்பா க தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும ன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றாா். தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மே லும் வா் கூறுகையில், கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறா ர்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். […]

மணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்

தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகரசபையில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோட்டிற்கு சிம்மசொப்பனமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினராக இருந்த மணிவண்ணன் திகழ்ந்துவந்தார். இந்நிலையில் மணிவண்ணனின் யாழ் மாநகர உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சி […]

புலிகள் ஜனநாயகவாதிகள்:சீ.வீ.கே-கொலையாளிகள்:சுமந்திரன்!

விடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் விடுதலைப்புலிகளை பற்றி முழுமையாக தெரியாதவர்களென வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று காலை வியாக்கியானம் செய்ய மாலை வேளையோ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை விருப்பவில்லை, அதனால் தான் கட்சி தலைவர்களையும் கொலை செய்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறியிருக்கிறார். மறுபுறம் அதேவேளை தமிழரசுக்கட்சியிலுள்ள அனைவரும் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானர்கள் […]