தமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி

தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் பிரசித்திபெற்ற தேவாலயத்திற்கு முன்பாக தாயக மக்களுக்கு நீதிகோரி பதாகை கவனயீர்ப்பு நிகழ்வும் , வணக்க நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பாரிய பதாகைகளில் பல்லின மக்களுக்கு இச் செய்தியை கொண்டுசெல்லும் முகமாக வாசகங்கள் யேர்மன் மொழியிலும் , ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டது. இளையோர்களால் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட […]

பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2019) சனிக்கிழமை பேரெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிசு லாச்சப்பல் பகுதியில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க தமிழீழ மக்களுக்கு இடம்பெற்ற அவலங்கள் அடங்கிய பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடி அணிவகுத்துச்சென்று லாச்சப்பல் பகுதியில் உள்ள திடலைச் […]

யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக உள்ள வீதியில் கறுப்பு உடைகள் அணிந்து அணிதிரண்ட மக்கள். கறுப்பு நிற பலூன்களில் இன அழிப்பு சம்பந்தமமான கோசங்களை எழுதி ஒவ்வொருவரும் தங்களின் கைகளில் ஏந்தியபடியும், பாதாதைகளையும் ஏந்தியபடியும் ஊர்வலமாக இம் மாநிலத்தின் பாராளுமன்றம் நோக்கிப் புறப்பட்டனர். ஆயிரக்கணக்கில் கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற மக்கள் இரண்டரை மணித்தியாலங்களின் பின்பு டுசில்டோர்வ் பாராளுமன்றத்தை வந்தடைந்தனர். அத்திடலில் […]

கண்ணீரில் நனைகிறது முள்ளிவாய்க்கால், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி

ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் பெருவெளியில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இறுதி யுத்தத்தில் தனது தாயாரை இழந்த சிறுமி ஒருவர் பிரதான சுடரை ஏற்றியதைத் தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். தமிழர் தாயத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் கனத்த இதயங்களுடன் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.

மே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்! – சீமான் சூளுரை

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம் என்கின்ற இரண்டு தாயக நிலங்களை உடையப் பூர்வகுடி மரபினர் தமிழர். தமிழர்களின் பூர்வீக தாய் நாடான தமிழீழ நிலத்தை பல நூற்றாண்டுகளாக சிங்களர்கள் ஆக்கிரமித்து மண்ணின் பூர்வ குடிகளான தமிழர்களை அடிமைத் தேசிய இனமாக வீழ்த்தி சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர மக்களாக நடத்தி வருகின்றனர். கொடுமையான சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர்கள் அகிம்சை வழியில் […]

ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.ஏற்பாட்டுக்குழுவுடன் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அணிதிரண்டு ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அனைத்து உறவுகளையும் அணி திரண்டு வந்து பங்கெடுக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் மீண்டும் அழைப்புவிடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழினப்பேரவலம் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகள் காலை ●10. 30 -அகவணக்கம். ●10.32 -பொது சுடரேற்றல் (முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த ஒருவர்). ●10.33 -ஏனைய சுடர்கள் ஏற்றப்படும் ●10.35-மலரஞ்சலி. ●10.40-மே -18 பிரகடனம் (வடக்கு கிழக்கு சர்வமத தலைவர்கள்) ●10.55-மலரஞ்சலி […]