சுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார் என, சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவரிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் 3 நாட்களாக, 19 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைகள் முடிவடையாத நிலையிலேயே, இது ஒரு நாடகம் என்றும், அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சி என்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்களும், […]

சுவிஸ் தூதரக ஊழியரிடம் துருவித் துருவி விசாரணை

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரான காலியா பரிஸ்டர் பிரான்சிஸ் இன்று (09) மாலை 4 மணிக்கு மீண்டும் சிஐடியில் ஆஜராகிய நிலையில் 10 மணி வரை 6 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. நாளை (10) மீளவும் அவர் சிஐடியில் ஆஜராகவுள்ளார். முன்னதாக இன்று மதியம் சிஐடியில் ஆஜராகிய நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு பெண் சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த […]

முதலாவது கடத்தல்! சிக்கலில் மாட்டியது இலங்கை அரசு

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டு தடுத்து வைத்து அச்சுறுத்தப்பட்டார் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்துள்ள சுவிஸ் தூதரகம் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பிர்ரே அலையன் எல்ஸசிங்கெர் இந்த வலியுறுத்தலினை முன்வைத்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை பெண் அதிகாரி ஒருவர் வெள்ளை வானில் […]