பயங்கரவாத தடைச்சட்டத்தில் கை வைக்கமாட்டேன்- சஜித் உறுதி

தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று நடந்த பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு தவறியதற்கு, பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அங்கு உரையாற்றிய அவர், “எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டேன். யாருடைய பேச்சுக்கும் செவிசாய்த்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களில் மோசமான மாற்றங்களைச் செய்ய […]

மாவீரர் தினத்திற்கு தடையில்லை:சஜித்

தமிழ் மக்களுடைய உறவுகளை புலிகள் என்றோ அவர்களது உறவினர்கள் என்றோ பிரித்துப் பார்க்க முடியாது. அவர்கள் எல்லோரும் தமிழ்த் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். ஆயுதப் போரில் உயிரிழந்த தமது சகல உறவுகளையும் அமைதியான முறையில் நினைவுகூர்வதற்கு தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. அதைத் தடுப்பது மாபெரும் மனித உரிமை மீறல்.” இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்

அனைத்து மக்களையும் இன, மத, மொழி, கட்சி பேதங்களை மறந்து மீண்டும் அவர்களை மீள்குடியேற்றுவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (07) காலை 11 மணிக்கு மன்னாரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர், தலைமன்னார், பேசாலை, சிலாபத்துறை துறைமுகங்களை அபிவிருத்தி செய்வேன். புத்தளம் வீதியை மன்னாருடன் வில்பத்து காட்டுக்கு பாதிப்பின்றி இணைப்பேன். தலைமன்னாரிலிருந்து திருகோணமலை வரையிலான நான்குவழிப் பாதையை அபிவிருத்தி செய்வேன். பாலர் பாடசாலைக் கட்டமைப்பை […]