தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுமந்திரன், சிறிதரன் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய பேச்சாளராக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும் நாடாளுமன்ற குழுவின் புதிய கொறடாவாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று (21) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்தத் தெரிவுகள் இடம்பெற்றன. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அவரின் இல்லத்தில் […]

தமிழர்களை தொடர்ந்தும் கையேந்த வைப்பதுதான் அரசின் திட்டமா? சிறீதரன்

தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கடன் இணக்க திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகப் போகின்றது. எனினும், பெரும்போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில் வழங்கக்கூடிய தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கான வல்லமை அரசாங்கத்திற்கு இல்லை. ஏற்கனவே […]