வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg

தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க்கல்விக்கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் மத்திய மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவருக்கான மதிப்பளிப்பு நிகழ்வாக 31.3.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்கள் பங்குபற்றியிருந்தன. 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும், கலைத்தேர்விலும், தமிழ்த்திறன் போட்டியிலும், யேர்மனி முழுவதுமாகத் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுள் இந்த மாநிலத்தில் உள்ள மாணவர்கள்; […]

வேலை வாய்ப்புப் பெற்றுத்தருவதாக யாழில் பல இலட்சம் பண மோசடி

இளையோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனர் கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரே இன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் மத்திய கல்லூரிக்கும் வேம்படி பெண்கள் பாடசாலைக்கும் […]

கொழும்பில் போட்டியா?-மாவை பதில்

கொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். “எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்று, கொழும்பு கிளை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும், தமது முடிவை கட்சிக்கு அறிவிப்பதாகவும் அவர்களிடம் கூறியிருந்தேன். இந்த விடயம் தொடர்பாக இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. […]

சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து ஐ.நா குழு ஆய்வு நடத்தும்?

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு இன்று கொழும்பு வரவுள்ள நிலையில், இந்தக் குழுவில் உள்ள நிபுணர்கள் சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குச் நுழைய அனுமதி கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையிலேயே, சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து பார்வையிடுவதற்கு ஐ.நா நிபுணர் குழு முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு முதல் முறையாக சிறிலங்காவுக்கு இன்று வரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 12ஆம் நாள் வரை சிறிலங்காவில் […]

அரசிற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள கூட்டமைப்பினர் தயாரா ?

அரசாங்கம் ஏமாற்றுகிறது அல்லது பொய் கூறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின்; அரசாங்கத்திற்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க வேண்டுமெனக் கேள்வி எழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவருமான அனந்தி சசிதரன் அரசிற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள கூட்டமைப்பினர் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் விடயத்தில் மட்டுமல்ல பொறுப்புக்கள் அனைத்திலும் தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை […]

சிறிலங்கா படையினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் – அவுஸ்ரேலியா

சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள அவுஸ்ரேலிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான HMAS Canberra வில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவுஸ்ரேலிய பதில் தூதுவர் ஜோன் பிலிப் இதனைத் தெரிவித்துள்ளார். ”உள்நாட்டுப் போரின் போது மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா படையினருடன் இணைந்து செயற்படுவதற்கு அவுஸ்ரேலிய ஆயுதப்படைகளுக்கு எந்த தயக்கமும் இல்லை. நாங்கள் சிறிலங்கா […]

சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளியே!

தன்னிடம் போர்க்குற்ற ஆதரங்கள் இருப்பதாகக்க கூறிவரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளியே எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அந்த அந்த ஆதாரங்களை வெளிப்படுத்தவோ போர்க்குற்றம் என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பொன்சேகா தயாராக இருக்கமாட்டார் என்றும் அவர் தனது அரசியலுக்காக மட்டுமே இவ்வாறு கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று (29) கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு […]

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழு சிறிலங்கா வருகிறது

சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு அடுத்தவாரம் சிறிலங்காவுக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. ஏப்ரல் 2ஆம் நாள் தொடக்கம், 12 ஆம் நாள் வரை இந்தக் குழு சிறிலங்காவில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் சித்திரவதைக்கு எதிரான மற்றும் மோசமான நடத்தைக்கு எதிரான பாதுகாப்பு குறித்து இந்தக் குழு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. நான்கு பேர் கொண்ட ஐ.நா உபகுழு இந்தப் பயணத்தின் போது, அரசாங்க அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகளுடனும் […]

சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களுடன் மாணவன் கைது!

சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த கல்லூரி மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்த செல்லும் விமானத்தில் இருந்த கல்லூரி மாணவர் வைத்திருந்த பெட்டியிலேயே இந்த அரிய வகை உயிரினங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது அதில் ஹார்ன்ட் பிட் வைபர் எனும் கொடிய விஷமுள்ள பாம்பு, உடும்பு, எகிப்திய ஆமைகள், விஷ அரணை, எறும்புத்திண்ணி ஆகியவை இருந்துள்ளன. அதேநேரம் இவை 34 வகையான கொடிய உயிரினங்கள் என […]

இந்திய மீனவர்கள் 11பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!

நெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களது மூன்று படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பதினொரு மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திய பின்னர் யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஒப்படைத்தனர். நீரியல் வளத்துறையினர் குறித்த மீனவர்களுக்கு எதிராக எல்லை தாண்டிய குற்ற வழக்குப் பதிவுசெய்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இனி நாடு பிளவுபடும்:சிறீகாந்தா மிரட்டல்!

மீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான பண்பு அல்லவென டெலோஅமைப்பின் செயலாளர் நாயகம் சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது பற்றி கருத்து தெரிவித்த அவர் தமிழர் தரப்பு கலப்பு பொறிமுறை பற்றி பேசக்கூடாதென தெற்கு எதிர்பார்ப்பது அதுவும் மிரட்டல் அரசியல் தமிழ் மக்களது விடுதலைப்போராட்டத்தின் முன்னாள் தூசு எனவும் அவர் தெரிவித்தார். டிலான் பெரேரா போன்று மீண்டுமொரு கறுப்பு ஜீலை நிராயுதபாணியான தமிழ் மக்களின் […]

சுமந்திரனும் சுத்துமாத்து ஐ.நாவும் சுத்துமாத்துத்தான்

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் செயற்பாடு தமிழா்களுக்கு பாாிய தோல்வியை கொடுத்துள்ளதாக கூறியிருக்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தமிழா்கள் நீதியை எதிா்பாா்க்கும் அவலம் குறித்து ஐ.நா மனித உாிமைகள் ஆணையகம் சிந்திக்கமறந்துள்ளதாகவும் கூறியுள்ளாா். யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அவா் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்று பத்து ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் நாம் இருக்கின்றோம். ஐக்கிய நாடுகள் மனித […]