பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை […]

நெடுந்தீவு மக்களுக்கு படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை!

நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதுவர் வியாழக்கிழமை (30) நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றார். இதன்போதே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.இதன்போது இந்திய தூதுவரிடம் நெடுந்தீவு மக்களுக்கான குடிநீர் தேவையினை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்றுத் தருமாறும் பிரதேச […]

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் -பிரிட்டனும் கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவது குறித்து இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் அன்றூ பட்ரிக் கரிசனை வெளியிட்டுள்ளார் டுவிட்டரில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளேன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும் மனித உரிமைகளை மதிக்கும் புதிய சட்டத்தினை கொண்டுவருவதாகவும் இலங்கை அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளில் உறுதியாகயிருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

தளபதி ராம் விடுதலை!

விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் நேற்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட […]

இந்திய தூதரகத்திற்கு மதிப்பளித்தது முன்னணி!

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் கூறியிருந்தார். ஆனால், கடலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் தற்போதும் இடம்பெறுகின்றது. அத்தோடு இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் […]

யாழ்.பல்கலையில் சுடரேற்றல்:ஆரியகுளத்தில் மரநடுகை!

இலங்கை அரசு மாவீரர் தினத்தை முடக்கிவிட துடிக்க இயலுமானவரையில் நினைவேந்தலை தமிழ் சமூகம் முன்னெடுத்தே வருகின்றது. யாழ்.பல்கலையில் மாவீரர் தின விளக்கேற்றலிற்கு இலங்கை காவல்துறை தடை பெற்றுள்ள நிலையில் இன்று மாவீரர் நினைவுதூபியில் தடாலடியாக மாணவர்கள் அஞ்சலித்து சுடரேற்றியுள்ளனர். புல்கலைக்கழ சூழலை சுற்றி படையினர் காத்திருக்க மாணவர்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இதனிடையே யாழ்.நகரிலும் மரநடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரியகுளத்தை சூழ அழகுபடுத்தலின் கீழ் மரங்களை மாநகரசபை உறுப்பினர்கள் நாட்டியுள்ளனர்.

யாழில் கறுப்பு ஜீலை கவனயீர்ப்பு!

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, இன அழிப்புக்கு நீதி வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய், வெளியேறு இராணுவமே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பினர். குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது […]

ஓடு ஓடு:போட்டோ போட அறிக்கை விட ஓடு!

தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி ஊடகங்களில் வெளியானதும் அதனை தேடுவதும் பின்னர் அறிக்கைவிட்டு அரசியல் செய்வதும் தமிழ் தேசியப்பரப்பில் சலித்துப்போன காட்சிகளாக மாறிவருகின்றது. அது நிலப்பிடிப்பாயினும் சரி கடல் பிடிப்பாயினும் சரி கண்மூடியிருக்கும் தமிழ் தலைவர்கள் ஊடகங்களில் பேசுபொருளானால் ஓடோடி வருவதும் அவர்கள் பின்னால் கமராவுடன் தொலைக்காட்சிகள் திரிவதும் அண்மைய காட்சிகளே. பூநகரி – கௌதாரிமுனை பகுதியில். சீன நிறுவனமொன்றால் முன்னெடுக்கப்பட்டு வரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காகவென நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், […]

முள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு!!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நடைபயணத்தின் மூன்றாவது நாளான இன்று தற்போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியை குறித்த பேரணி அடைந்துள்ளது.இதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் இடிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக தூபியை கட்டுவதற்கு முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தின் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிக்கப்பட்டது.

இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல!!

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் நாங்கள் தெரியப்படுத்துவது, இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்தோ அல்லது தனிநபர்சார்ந்தோ அல்லது நிறுவனம் சார்ந்தோ நடைபெறுகின்ற போராட்டம் இல்லை. இப்போரட்டமானது வடக்கு – கிழக்கு சார்ந்த சிவில் அமைப்புக்களால் நடத்தப்படுகின்றன என்பதை அறியத்தருகின்றோம் என தவத்திரு வேலன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்

தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தமிழீழ மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். தமது யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை உரிய நேரத்திற்கு மாவீரர்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார். இதன்போது அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்

வவுனியாவில் சிங்களப் படையினரதும் பொலிஸாரதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. சரியாக 6.05 இற்கு ஆலயங்களில் மணி ஒலி எழுப்பப்பட்டு வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. இதன்போது சில இடங்களில் துயிலும் இல்லப் பாடலும் ஒலிக்க விடப்பட்டது. படையினரும் பொலிஸாரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் தடைகளையும் மீறி மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர். […]