யேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2019

யேர்மனி ஒபர்கவுசன் நகரத்தில் 27.11.2019 புதன்கிழமை தேசிய மாவீரர் நாள் மிக எழுச்சியாக உணர்வுகள் பொங்க நடைபெற்றது. யேர்மனியில் வாழும் தமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரண்டு விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய எம் மாவீரச் செல்வங்களுக்கு கண்ணீர் மல்க தங்கள் இதய வணக்கத்தை சுடர் ஏற்றி கார்த்திகை மலர் தூவிச் செலுத்தினார்கள். பொதுச்சுடரினை யேர்மனியின் இடதுசாரிக் கட்சியின் ஒபர்கவுசன் பிரதிநிதி Henning Von Stolzenberg அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் […]

ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு.

27.11.2019 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். மாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. மாவீரர்நாள் சிறப்புரையைத் தொடர்ந்து சரியாக 13.35க்கு மணி ஒலித்து ஓய, அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரதான ஈகைச்சடரினை வீரவேங்கை மயிலினி அவர்களின் சகோதரன் திரு. முகுந்தன் சின்னத்தம்பி அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து ஏனைய உரித்துடைய உறவுகளும் கல்லறைகளில் […]

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ வணக்கம்

தமிழீழ தேச விடுதலைக்காக களமாடி இன்னுயிர்களை ஈந்த மாவீர்களுக்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுவந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர். தாயக நேரப்படி சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. பிரதான ஈகச்சுடரை இரு மாவீரர்களின் சகோதரியான நிரஞ்சன் கலைவாணி ஏற்றினார். அதைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர், […]

முள்ளியவளை துயிலும் இல்ல மாவீரர் நினைவேந்தல்

முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நியூசிலாந்து மண்ணில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019

மாவீரர் நாள்! தமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் விதையாகி போன தியாக வீரமறவர்களை வணங்கிடும் புனித நாள். இப்புனித நாளில் தமிழீழ விடியலுக்காய் சரித்திரமாகி போன வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஓக்லாந்து நகரில் கார்த்திகை 27 ஆம் நாள் Mt Roskill war memorial மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. மாலை 6.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. தமிழ் […]

கஞ்சிகுடிச்சாறு கண்ணீரில் நிரம்பியது

அம்பாறை – கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது நான்கு மாவீரர்களின் தாயரான ஏரம்பு செல்லம்மா பொதுச் சுடரினை ஏற்றிவைத்துள்ளார். கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருமளவான தாய்மார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்ணீருடன் உயிர்நீத்த தமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முழங்காவில் துயிலும் இல்ல நினைவேந்தல்

கிளிநொச்சி – முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிழக்கு பல்லை வளாகத்தில் எழுச்சி நினைவேந்தல்

மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய மாவீரர் தினம் இன்று (27) கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவ தடையை மீறி அஞ்சலி!

தென்மராட்சி – கொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு பல இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதற்கமைய கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக நினைவேந்தலை நடாத்த முற்பட்டபோது இராணுவத்தினர் தடையை ஏறபடுத்தியுள்ளனர். ஆயினும் தடைகளைத் தாண்டி குறித்த இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வு எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.