இராணுவ தடையை மீறி அஞ்சலி!

தென்மராட்சி – கொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு பல இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதற்கமைய கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக நினைவேந்தலை நடாத்த முற்பட்டபோது இராணுவத்தினர் தடையை ஏறபடுத்தியுள்ளனர்.

ஆயினும் தடைகளைத் தாண்டி குறித்த இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வு எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்