விஜயகாந்துக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி

மறைந்த தென்னிந்திய பிரபல நடிகரும் , தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான , கப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த்க்கு யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழீழ ஆதரவாளர் விஜயகாந்த் காலமானார்

தமிழீழ ஆதரவாளர் விஜயகாந்த் காலமானார்.விஜயகாந்த் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சென்னை மணப்பாக்கம் மியாட் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அந்நிலையில் வைத்தியசாலை மற்றும் விஜயகாந்தின் இல்லம் அமைந்துள்ள சாலிக்கிராமம் பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய […]

தொப்புள் கொடிகளை அறுக்க சதி?

இந்திய இலங்கை மீனவர்களிடையே தமது முகவர்கள் ஊடக மோதல்களை தோற்றுவிக்க யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகம் மும்முரமாகியிருக்கின்றது. இலங்கை கடற்படையால் வேட்டையாடப்படும் இந்திய மீனவர்களிற்கு எதிராக கடற்தொழில் சமூகத்தினர் சார்பில் சட்டத்தரணிகளை களமிறக்க இந்திய துணைதூதரகம் தூண்டிவருகின்றதென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அ,அன்னராசா சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள இழுவைமடி தொழிலை நிறுத்த வேண்டும். நிறுத்த தவறும் பட்சத்தில் தொப்புள் கொடி உறவாகிய தமிழ்நாடு ஆக […]

நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா!

லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இன்று ராஜ்யசபாவிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பிக்களும் எதிராக 105 எம்.பிக்களும் வாக்களித்தனர். இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் லோக்சபாவில் எளிதாக சட்ட மசோதா நிறைவேறியது. இந்த நிலையில் நாளை ராஜ்யசபாவில் […]

டில்லி நிர்பயா வன்புணர்வு குற்றவாளிகளை தூக்கிலிட முடிவு!

2012-ல் இந்தியாவை மட்டுமல்லாது உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கும் 4 பேரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக டெல்லி திகார் சிறைச்சாலை தயாராகி வருகிறது. இருப்பினும், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான சட்ட வழிகள் இன்னும் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆசியாவிலேயே பெரிய சிறைச்சாலையான டெல்லி திகார் சிறையில் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக பீகாரின் பக்சார் சிறையில் […]

என்கவுண்டர் விவகாரம் : தன்னையும் கொன்றுவிடுங்கள் என கர்ப்பிணி பெண் கோரிக்கை!

பாலியல் வன்புணர்விற்கு பின் படுகொலை செய்யப்பட்ட பிரியங்கா ரெட்டியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட சின்னகேசவலு என்பவரின் கர்ப்பிணி மனைவி தன்னையும் கொன்று விடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் குறித்த பெண் நேற்றைய தினம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. தன் கணவன் இன்றி தன்னால் வாழ முடியாது எனத் தெரிவித்துள்ள குறித்த பெண், சின்னகேசவலுவின் உடலை […]

கோட்டாபயவின் டெல்லி வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய வைகோ கைது!

சிறிலங்கா சனாதிபதியாக வெற்றிபெற்றபின் கோத்தமாய ராசபக்ச முதல் அரசுமுறைப் பயணமாக இந்திய சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழினப்படுகொலையின் முக்கிய கொலையாளி என உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இந்திய தலைநகர் புதுதில்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தலமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது இதில் அக்கட்சியின் மற்றொரு எம்பியான கணேசமூர்த்தியும் மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா உட்பட நூற்றுக்கணக்கான கட்சியினர் மற்றும் தமிழுணர்வாளர்கள் கலந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அனைவரும் தில்லி காவல்துறையால் […]

வைகோவின் முக்கிய கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்!

இந்திய விமானங்களின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இன்றைய காலகட்டத்தில், விமானங்களில் பறப்பது சொகுசுப் பயணம் அல்ல. இப்போது நேர சேமிப்பைக் கருதி நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர், விவசாயிகள் எனப் பலர் விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வேலைகளுக்காக வளைகுடா […]

சனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது!

இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகளையே தமிழீழத்துக்கானதாக எடுத்துக்கொள்ளலாம் என பாமக தலைவர் மருத்துவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்! இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்…. தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது. இலங்கையில் நேற்று நடைபெற்ற 8-ஆவது […]

ஜனாதிபதி தேர்தல்: ஈழத்தமிழர்களிடம் வைகோ முக்கிய வேண்டுகோள்!

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழ் இனத்தின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு ஈழத்தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை அறிந்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். எனவே, வாக்குச் சாவடிக்குப் போகும் முன்பு, […]

மதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை!

தாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை “ என் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையோடு தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவரின் படத்தோடு ஒரு பிரமாண்ட விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிப்படம் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாக தமிழர்கள் மகிழச் அடைந்ததோடு அதை வைத்தவரகளுக்கும் உலகமெங்கும் இருந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்கான […]

இந்தியா ஒரு நாடே அல்ல! “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு “United States of India” என மதிமுக பொதுசெயலர் வைகோ இன்று மாலை மாநிலங்களவையில் துணிச்சலான முழக்கத்தை எழுப்பியுள்ளார். தேசிய புலனாய்வு முகவை (NIA) திருத்த சட்டம் தொடர்பில் மாநிலங்களவையில் இடம்பெற்ற வாததின்போதே அதை எதிர்த்து பேசும்போதே இவ்வாறு கூறியுள்ளார். “இது ஒரு இனம், ஒரு கலாச்சாரம், ஒரு தேசம் என அமைந்த நாடு அல்ல.., இது பல தேசிய இனங்களை, பல மொழிகளை, பல கலாச்சாரங்களை […]