ஜனாதிபதி பதவி விலகல் தொடர்பில் வாசுதேவ நாணயக்கார வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை பதவி விலகக்கூடும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என தற்போது அனைவரும் கூறுகின்றனர் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

சாணக்கியன், சுமந்திரனின் பசப்பு வார்த்தை! மக்கள் ஏமாறக்கூடாது -கஜேந்திரன்

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கில் இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தொடர்ந்தும் ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ் தாயகத்தில் […]

மனைவி, மச்சான்…கூண்டோடு உள்ளே!

பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த மற்றுமொரு பெண் ஒருவரே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார். முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பில் 20 வாக்குமூலங்கள் பதிவு […]

பொலிகண்டிக்கும் தடையாம்?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி வவுனியாவிலிருந்து இன்று மன்னார் நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. நாளை யாழ்ப்பாணத்தை அது வந்தடையவுள்ள நிலையில் நிகழ்வின் இறுதி மையமான பொலிகண்டியை சென்றடைய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை […]

சிறிலங்கா நாடாளுமன்ற ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படாத விக்கியின் உரை

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் நீதியரசருமான சி.வி விக்கினேஸ்வரன் பாராளுமன்றில் ஆற்றிய உரை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படவில்லை. சிங்கள தலைவர்கள் பலர் விக்கினேஸ்வரனின் உரை இனவாதம் என்று கூறி அதனை பாராளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்குமாறு குரல் கொடுத்தருந்த நிலையிலும் சபாநாயகர் அதனை நீக்கவில்லை. அதே வேளை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழர்கள் தான் இலங்கையின் மூத்த குடிகள் என்று உரையாற்றியது போன்று, அதனை நிரூபிக்கும் வகையில் ஆய்வுக் கட்டுரைகளை ஆவணங்களை […]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்

ஓற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு அதற்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளை முடக்குவதற்கு ஆணை கேட்கின்ற தரப்புக்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.அதேவேளை தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க தடம்மாறாது பயணிக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும் .இதனூடாகவே தமிழ் மக்களின் இருப்பைத் தக்க வைத்தக் கொண்டு அபிலாசைகளையும் வென்றெடுக்கக் கூடியதாக அமையுமென முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக […]

முன்னணி கண்டனம்?

தமிழர்களின் வரலாற்று தலங்களை ஆக்கிரமித்து பௌத்த மயமாக்கும் சதித் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டிப்பதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணண் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களின் கலை கலாச்சார பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாது அதனை அழித்தொழிக்கின்ற திட்டமிட்ட வேலைகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்கா அரசுகளின் இத்தகைய இனவாதச் செயற்பாடுகளுக்கு பௌத்த பேரினவாதிகள் தொடர்ந்தும் ஆதரவை வழங்கி வருகின்றனர். ஏனெனில் சிங்கள அரசுகளும் அதே பேரினவாதச் […]

டில்லி நிர்பயா வன்புணர்வு குற்றவாளிகளை தூக்கிலிட முடிவு!

2012-ல் இந்தியாவை மட்டுமல்லாது உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கும் 4 பேரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக டெல்லி திகார் சிறைச்சாலை தயாராகி வருகிறது. இருப்பினும், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான சட்ட வழிகள் இன்னும் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆசியாவிலேயே பெரிய சிறைச்சாலையான டெல்லி திகார் சிறையில் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக பீகாரின் பக்சார் சிறையில் […]

புலிகள் மீளுருவாக்கம்: யாழில் வீடொன்றில் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட வீட்டில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வீட்டில் பெரியளவிலான ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டனர். இதனையடுத்து அதுதொடர்பாக நீதிமன்றின் அனுமதியைப் பெற்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இராணுவத்தினர் அறிவித்திருந்த நிலையிலையே தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புலிகளின் மீளுருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வீட்டில் ஆயுதக் கிடங்கு அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட […]

ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.ஏற்பாட்டுக்குழுவுடன் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அணிதிரண்டு ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அனைத்து உறவுகளையும் அணி திரண்டு வந்து பங்கெடுக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் மீண்டும் அழைப்புவிடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழினப்பேரவலம் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகள் காலை ●10. 30 -அகவணக்கம். ●10.32 -பொது சுடரேற்றல் (முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த ஒருவர்). ●10.33 -ஏனைய சுடர்கள் ஏற்றப்படும் ●10.35-மலரஞ்சலி. ●10.40-மே -18 பிரகடனம் (வடக்கு கிழக்கு சர்வமத தலைவர்கள்) ●10.55-மலரஞ்சலி […]

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன!

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி

முன்னாள் போராளிகளிடம் விசாரணை!

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் காவல் துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை