ஒதியமலைப் படுகொலை நினைவேந்தலைக் குழப்பிய பொலிஸ்!

ஒதியமலைப் படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நேற்று கடைப்பிடிக்கப்பட்ட போது ஒட்டுசுட்டான் பொலிஸார் நிகழ்வில் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர்.

1984ஆம் ஆண்டு டிசெம்பர் 2ஆம் திகதி அதிகாலைவேளையில் ஒதியமலைக்குள் புகுந்த இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்துக்கு வரவழைத்து அவர்களது ஆடைகளைக் களைந்து 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேர் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டனர்.

இதன் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக நேற்று இடம் பெற்றன. இந்தநிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர்அங்கு வந்து ஒலிபெருக்கி பாவிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெறவில்லை என தெரிவித்து நிகழ்வில் புகுந்து குழப்பத்தை விளைவித்தனர். கடந்த காலங்களில் எந்தவொரு தொல்லையும் இல்லாமல் நினைவேந்தல் இடம் பெற்றது என்பதைச் சுட்டிக்காட்டி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் திட்டமிட்டதற்கு முன்னதாக நிகழ்வை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்