நாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை!

இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம். கெஞ்சினோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு […]

முடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் […]

காலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைப் பேரணி நேற்று கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றது. நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கிய இந்தப் பேரணியில் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இந்தப் பேரணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும், சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். இதுவரை நடத்தப்பட்ட தேர்தல் பேரணிகளில் மிகப் பிரமாண்டமானதாக இந்தப் பேரணி அமைந்திருந்தது. இதில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர் என்று […]

சென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி

சென்னையில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு, எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ளது. இந்த நிலையிலேயே, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்திய அரசாங்கம் […]

17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது

எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முடிவுகளின் படி, ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும், ஜேவிபி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்த தேர்தலில், பொதுஜன பெரமுனவுக்கு 23,372 வாக்குகளும், ஐதேகவுக்கு 10,113 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 5,273 வாக்குகளும், ஜேவிபிக்கு 2,435 வாக்குகளும் கிடைத்துள்ளன. தொடர்டர்புடைய […]

புலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு துறையினால் ஒழுங்கமைக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழகத்தின் பிரபல நடிகர் ஒருவர் விடுதலைபுலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் என சரியான ஆதாரம் கிடைத்தால் அவர் மலேசியாவுக்குள் வர தடை விதிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நடிகர் யார் என்று பெயர் குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்படாவிட்டாலும், அது நடிகர் சீமானாகத்தான் இருக்கக்கூடும் என மலேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம்தமிழர் […]

கொழும்பில் பதட்டம் படையினர் குவிப்பு

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் விசேட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸார் கோட்டையில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களுக்குமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்றுவரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் நாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை! இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் […]

மண்ணுக்காக போராடியவர் உதவியற்ற நிலையில்

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது நேரடியாக பாதிக்கப்பட்டு இரு கண்களையும் ஒரு காலையும் இழந்த முன்னாள் போராளியே இராமையா புஷ்பரெட்ணம். இவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் கணேசபுரம் வெள்ளாங்குளம் பகுதியில் மீள் குடியேறி வசித்து வருகின்றார். தொடர்சியாக மீள் குடியேறி பல்வேறுப்பட்ட சிரமங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் போராட்ட நினைவுகளை சுமந்து வாழ்கையை நகர்த்தும் இவர், சில நேரங்களில் ஒரு வேளை உணவுடனே உறங்க வேண்டிய நிலை ஏற்படுமென தெரிவிக்கின்றார். […]

தமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க முன்னாள் முதல்வரும் ஆதரவாம்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் நடைபெற்ற சிவில் தரப்புக்களது சந்திப்பிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளுடனும்; ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான நிலைப்பாடு எடுக்கும் நோக்கிலான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் இன்று முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுடம் ஆகியோருடன் […]

உள்நாட்டில் சேவையில் ஈடுபட வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி

வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சிறிலங்காவின் உள்நாட்டு விமான நிலையங்களுக்கு சேவைகளை நடத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. தற்போதுள்ள இருதரப்பு உடன்பாடுகளின் கீழ் சிறிலங்காவுக்கான சேவைகளில் ஈடுபடும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள், உள்நாட்டு விமான நிலையங்களுக்கு போக்குவரத்தை மேற்கொள்ள முடியாது. எனினும், வெளிநாட்டு விமான நிறுவனங்கள், உள்நாட்டு விமான நிலையங்களுக்கு சேவையை நடத்துவதற்கு ஒரு ஆண்டு செயற்பாட்டு அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு, சிறிலங்கா சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம், மத்தல […]

சஜித்தை நிறுத்த ஐதேக சம்மேளனம் அங்கீகாரம்

சஜித் பிரேமதாச அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு சம்மேளனக் கூட்டத்தில் இன்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஐதேகவின் சிறப்பு சம்மேளனக் கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் ஆரம்பமாகியது. இதில், ஐதேக தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துவதாக அறிவித்தார். சஜித்தின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடையில் அழைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, கட்சியின் இந்த தீர்மானத்துக்கு சம்மேளனம் ஒருமனதாக […]

விபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினரும் தேசிய பற்றாளருமான ஏரம்பு இரத்தினவடிவேல் விபத்தில் சிக்கி உயிரிளந்துள்ளார். நேற்றைய தினம் பிற்பகல் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஏரம்பு இரத்தினவடிவேல் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிளந்துள்ளார். தாயகத்தின் அத்தனை போராட்டங்களிலும் கலந்துகொள்ளும் இவர் கேப்பாப்பிலவு நிலமீட்பு போராட்டத்தில் அந்த மக்களோடு இரவு பகலாக நின்று போராடியவர் காணாமல் […]