தளபதி ராம் விடுதலை!

விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் நேற்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட […]

ஜனாதிபதி பதவி விலகல் தொடர்பில் வாசுதேவ நாணயக்கார வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை பதவி விலகக்கூடும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என தற்போது அனைவரும் கூறுகின்றனர் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.