வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு!

பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் மிகவும் எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் தியாக தீபம் திருவுருவப் படம் வைக்கப்பட்டு மலர், மாலை சூடி மெழுகுவர்த்தி ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டு வருவதுடன் தாயகப் பாடல்கள் தொடர்ச்சியாக ஒலிக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில்… புலிகளின் சீருடையுடன் இருக்கும் படம் பயன்படுத்துவதையும் எழுச்சியை ஏற்படுத்தும் தாயகப் பாடல்களை ஒலிபரப்புவதையும் தவிர்த்து நினைவேந்தலை செய்யுமாறு சிறிலங்கா இராணுத் தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்பட்டதாக கூறியிருந்தார். கடந்த 15 ஆம் திகதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்வில் அப்பகுதி மக்களும் வீதியால் செல்வோரும் பங்கேற்று வணக்கம் செலுத்திவருகின்றனர்.

செய்தி, புகைப்படம் மற்றும் கானொளி : ஈழதேசம் செய்தியாளர் மு.காங்கேயன்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்