பாண்டியன்குளம் பிரதேசங்களில் சட்டவிரோத காடழிப்பு-அதிகாரிகள் மௌனம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் சட்ட விரோத காடழிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பிரதேச செயலக அதிகாரிகள் அசண்டையீனமாக இருப்பதாகவும் ,நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு மறைமுக அனுமதி வழங்குவதாக சந்தேகிப்பதாகவும் பிரதேச பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் குறிப்பாக குத்தகை அடிப்படையிலாக காணிகளை பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் குத்தகை அடிப்படையில் கேட்டு கொள்ளும் காணி அளவினை விடவும் மேலதிகமாக காணிசிரமதானம் செய்து வைத்து கொள்ளும் நபர்கள் மீது பிரதேச […]

மாங்குளம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர்!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் மகா வித்தியாலயத்திற்கு நேற்றைய தினம் புதிய அதிபர் கடமைஏற்றுள்ளார் துணுக்காய் வலயத்தின் மையத்தில் அமைந்துள்ள 1AB தரத்தைச் சேர்ந்த மாங்குளம் மகாவித்தியாலய பாடசாலையானது இரண்டு வருடங்களுக்கு மேலாக அதிபர் இன்றி இயங்கி வந்தது குறித்த பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி  கடந்த 17 ம் திகதி  பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் இணைந்து  பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை  முன்னெடுத்திருந்தனர் இதேவேளை  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை பிரதிநிதிகளுடன் உரையாடிய வடமாகாண கல்வி […]

கடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு

நேற்றைய தினம் சிறிலங்காவின் சுதந்திர தினம் , ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று சிங்கள பேரினவாத அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவும் , தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தவும் நடைபெற இருக்கும் 46 வது ஐநா மனிதவுரிமை பேரவை கூட்டத்தொடரில் யேர்மன் அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையுடன் , நூற்றுக்கணக்கான மக்கள் யேர்மன் தலைநகரில் உள்ளே வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக அணிதிரண்டு போராடினர். தமிழீழ மண்ணின் விடிவிற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த […]

மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்!

மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தவர்கள் அனைவரும் மௌன ஆர்ப்பாட்டத்துடன் கூடிய கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர் கடந்த 10.12.2020 அன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலரின் உத்தியோக தங்குமிட விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றிருந்தது “அரச அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்து”“பறிக்காதே பறிக்காதே அரச ஊழியர்களின் பாதுகாப்பை பறிக்காதே”“நினைக்காதே நினைக்காதே கல்லெறிந்து காரியம் சாதிக்க நினைக்காதே” போன்ற எதிர்ப்பு வாசக அட்டைகளுடன் […]

யேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2019

யேர்மனி ஒபர்கவுசன் நகரத்தில் 27.11.2019 புதன்கிழமை தேசிய மாவீரர் நாள் மிக எழுச்சியாக உணர்வுகள் பொங்க நடைபெற்றது. யேர்மனியில் வாழும் தமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரண்டு விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய எம் மாவீரச் செல்வங்களுக்கு கண்ணீர் மல்க தங்கள் இதய வணக்கத்தை சுடர் ஏற்றி கார்த்திகை மலர் தூவிச் செலுத்தினார்கள். பொதுச்சுடரினை யேர்மனியின் இடதுசாரிக் கட்சியின் ஒபர்கவுசன் பிரதிநிதி Henning Von Stolzenberg அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் […]

ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு.

27.11.2019 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். மாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. மாவீரர்நாள் சிறப்புரையைத் தொடர்ந்து சரியாக 13.35க்கு மணி ஒலித்து ஓய, அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரதான ஈகைச்சடரினை வீரவேங்கை மயிலினி அவர்களின் சகோதரன் திரு. முகுந்தன் சின்னத்தம்பி அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து ஏனைய உரித்துடைய உறவுகளும் கல்லறைகளில் […]

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ வணக்கம்

தமிழீழ தேச விடுதலைக்காக களமாடி இன்னுயிர்களை ஈந்த மாவீர்களுக்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுவந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர். தாயக நேரப்படி சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. பிரதான ஈகச்சுடரை இரு மாவீரர்களின் சகோதரியான நிரஞ்சன் கலைவாணி ஏற்றினார். அதைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர், […]

முள்ளியவளை துயிலும் இல்ல மாவீரர் நினைவேந்தல்

முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.