தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , மின்சார கம்பி பொதுமக்களின் கூட்டத்தில் அறுந்து […]

எனது வாக்கு கஜேந்திரகுமாரிற்கே:சி.வி!

வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வாறான ஒரு பின்னணியில் கஜேந்திரகுமார் தேர்தலை புறக்கணிப்பது நடைமுறை சாத்தியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து தொடர்பாக பதிலளித்துள்ள அவர் “வழமைப் போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தேர்தல் புறக்கணிப்பை கண்காணித்து வழிநடத்தியிருப்பார்கள். எனினும் தற்பொழுது வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வாறான ஒரு பின்னணியில் […]

கண்ணீர் வணக்கம்-தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழின உணர்வாளரும் பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்தின் தலைவருமாகிய புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த் அவர்கள் 28.12.2023 அன்று சாவடைந்துள்ளார் என்ற செய்தி, தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியினையும் ஆழ்ந்த துயரினையும் ஏற்படுத்தியுள்ளது. இயல்பாகவே தமிழ்மொழி மீது பற்றுக்கொண்ட விஜயகாந்த் அவர்கள், கல்விகற்கும் காலத்திலிருந்தே இந்தி மொழித்திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். ஈழத்தமிழர்கள் மீது பேரன்பு கொண்ட விஜயகாந்த் அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை முழுமையாக ஆதரித்து வந்ததோடு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு […]

உலகத்தமிழர் பேரவை:புதிய உருட்டின் பங்காளரில்லை-எம்.ஏ.சுமந்திரன்

உலகத்தமிழர் பேரவையின் புதிய உருட்டான இமயமலைப் பிரகடனத்துக்கும் தமக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்பட வேண்டும் .அத்தகைய தொனிப்பொருளை மையப்படுத்திய ‘இமயமலைப் பிரகடனம்’ உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால்; ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்தப் பிரகடனத்தை […]

தமிழர் பகுதிகளில் போதை வஸ்த்து வினியோகத்தில் இராணுவத்தினர்-த.தே.ம.மு

வடக்கு-கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார். வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரையில் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பது மிக முக்கியமானது வடக்கு கிழக்கில் போதைக்கு அடிமையாதல் என்பது, மிகப் பெரும் பிரச்னையாக உருவாகிவருகின்றது. ஏனென்றால்-இலங்கை அரசானது இன்னும் ஆயுதக் கிளர்ச்சியை தோற்கடிக்கும் மனோநிலையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் முப்படைகள் ஊடாகவே போதைப் பொருள் பாவனை ஊக்குவிக் கப்படுகின்றது. அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடனேயே […]

புதிய தலைமையை தெரிவு செய்வதில் சிக்கல்-மாவை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு முயற்சிகளை எடுத்துவருவதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் விண்ணப்பங்களைச் செய்துள்ளனர். ஆரம்பத்திலிருந்தே புதிய தலைமைக்கான தெரிவானது வாக்கெடுப்பின்றி நடைபெறவேண்டும். அதுவே கடந்த காலங்களில் சம்பிரதாயமாக இருந்து வருகின்றது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் மாவை சோ.சேனாதிராஜா தற்போது […]

கடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு

நேற்றைய தினம் சிறிலங்காவின் சுதந்திர தினம் , ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று சிங்கள பேரினவாத அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவும் , தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தவும் நடைபெற இருக்கும் 46 வது ஐநா மனிதவுரிமை பேரவை கூட்டத்தொடரில் யேர்மன் அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையுடன் , நூற்றுக்கணக்கான மக்கள் யேர்மன் தலைநகரில் உள்ளே வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக அணிதிரண்டு போராடினர். தமிழீழ மண்ணின் விடிவிற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த […]

கட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்

தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (07.08.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் நாம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளோம் என்பது உன்மை. தமிழ் அரசு […]

கூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே?

கூட்டமைப்பு கடந்த காலத்தில் உரிமை அரசியலை தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இம்முறை தேர்தலில் கணிசமானளவு மக்கள் சிங்கள கட்சிகளுக்கும் அரசாங்க சார்பு தமிழ் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் நிலைமையை உருவாக்கியிருக்கின்றதென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதே தவறை மீண்டும் செய்து எமது 70 வருட கால போராட்டத்துக்கு சாவு மணி அடித்துவிடாதீர்கள எனவும் அவர் கோரியுள்ளார். வடக்கு- கிழக்கு ரீதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. தலைவர் தம்பி […]

முண்டு கொடுத்தவர்களிற்கு வாக்களிக்கவேண்டாம்?

நேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்! கட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரை தெரிவு செய்யவேண்டும். அவர்களுக்கு வாக்களிக்க முயற்சிப்போம். நிராகரிக்க வேண்டியவர்களை அவதானத்துடன் நிராகரிப்போம். தெரிவுசெய்ய வேண்டியவர்களை அவதானிப்புடன் தெரிவு செய்வோம் -அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், எமக்கு முன் […]

ஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறீலங்காவினுடைய புதிய ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட விடயம் இன்று மிகமுக்கிய பேச்சுப்பொருளான விடயமாக உள்ளது. விசேடமாக இந்திய ஊடகங்களுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு சுமார் 100 வருடங்களுக்கு வழங்கப்பட்டமை தவறு என்றும் அந்த ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படல் வேண்டும். என்றும் பகீரங்கமாகக் கூறியுள்ளார். இந்திய தனது தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அயல் நாடுகளில் வெளிசக்திகள் – குறிப்பாக வல்லரசுகள் காலூன்றுவதனைத் […]

அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாரானது

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல மாவீர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின ஏற்பாடுகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதன்டி, முள்ளியவளை தேராவில் தேவிபுரம் இரணைப்பாலை