தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக , கேக் வெட்டி கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கொண்டாட்டத்தில் ,விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகள் , சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு , பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு , வெடி கொளுத்தி . பெரியளவிலான கேக் வெட்டப்பட்டது. அதனை தொடர்ந்து , அங்கிருந்தவர்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன

அத்துடன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்