பளையில் குடும்பஸ்தர் மீது புலனாய்வாளர்களால் தாக்குதல்!

பளை வண்ணான்கேணி பகுதியை சேர்ந்த திருநாமம் சிறிதரன் காந்தன் எனும் குடும்பஸ்தர் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்………

அருள்தாஸ் சனிஸ்ரன் எனும் புலோப்பளை பகுதியை சேர்ந்த இளைஞர் தனது சமூக வலைத்தளங்கள் ஊடாக தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது

குறித்த புலோப்பளை பகுதியை சேர்ந்த இளைஞரும் , காயங்களுக்குள்ளான வண்ணான்கேணி பகுதியை சேர்ந்த இளைஞரும் நண்பர்களாக இருந்திருக்கின்றார்கள் ,

இந்த நிலையில் மேற்கூறிய  அருள்தாஸ் சனிஸ்ரன் எனும் நபரை  விசாரணைக்கு அழைத்துள்ளனர் ,

இந்த நிலையில் அருள்தாஸ் சனிஸ்ரன் தலைமறைவாகியுள்ளார்

இந்த நிலையில்   அவரின் நண்பர்  தொடர்பான தகவல்களை வண்ணான்கேணி இளைஞரிடம் கேட்டு விசாரித்துள்ளனர்

அவர் தொடர்பான தகவல்களை விசாரிப்பதற்காக அழைத்த  வேளை அவர் மறுக்கவே குறித்த இளைஞரை பொலிஸ் என அடையாளமிடப்பட்ட மேல் சட்டை அணிந்திருந்த 4 நபர்கள் பலாத்காரமாக மோட்டர் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளனர்

இந்த நிலையில் இடையில் வைத்து குறித்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டு இடையிலேயே இறக்கி விட்டு சென்றதாக காயங்களுக்கு உள்ளான இளைஞன் தெரிவித்துள்ளார்

இவ் விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றன

மறுமொழி இடவும்