தியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்!

இனப்படுகொலையாளிகளின் ஆட்சியில் சிங்களக் காவல்துறையின் கெடுபிடிகளோடு நீதிமன்றத் தடையுடன் தியாக தீபம் லெப்.கேணல்திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளின் முதலாம் நாள் இன்று ஆரம்பமாகின்றது. யாழ்ப்பாணம் ஊரெழுவில் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார் திலீபன். தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு இலங்கைத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர். ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து […]

திலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறி கோண்டாவில் பகுதியில் வைத்து தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

டெலோவை உடைக்கும் சுமந்திரன்?

கூட்டமைப்பில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதிக்கத்தை குறைத்துவிட செல்வம் அடைக்கலநாதன் முதல் பங்காளிகள் வரையாக தலையால் நடக்க சத்தமின்றி தனது அடுத்த கட்ட பயணத்தை ஆரம்பித்துள்ளார் சுமந்திரன். வடமராட்சியில் தனது இலங்கை தமிழரசுக்கட்சியின் வடமராட்சி காரியாலயத்தை அவர் திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே கரணவாய்,உடுப்பிட்டி வருடத்திற்கொரு தடைவ காரியாலயங்களை திறப்பதும் பின்னர் அதனை இழுத்து மூடுவதும் வழமை. இவ்வாறு ஏற்கனவே திறக்கப்பட்ட அலுவலக ங்களை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது புதிதாக ஒரு அலுவலகத்தை திறந்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். இதனிடையே தனது அலுவலக திறப்பு […]