பாண்டியன்குளம் பிரதேசங்களில் சட்டவிரோத காடழிப்பு-அதிகாரிகள் மௌனம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் சட்ட விரோத காடழிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பிரதேச செயலக அதிகாரிகள் அசண்டையீனமாக இருப்பதாகவும் ,நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு மறைமுக அனுமதி வழங்குவதாக சந்தேகிப்பதாகவும் பிரதேச பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

குறிப்பாக குத்தகை அடிப்படையிலாக காணிகளை பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் குத்தகை அடிப்படையில் கேட்டு கொள்ளும் காணி அளவினை விடவும் மேலதிகமாக காணிசிரமதானம் செய்து வைத்து கொள்ளும் நபர்கள் மீது பிரதேச செயலகம் சட்ட நடவடிக்கை எடுக்க தவறுவதாகவே பிரதேச பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

இதேவேளை நேற்றைய தினம் (17-07-2023) மாந்தை கிழக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூட்டத்தில் மாந்தை கிழக்கு பகுதிகளில் குத்தகை அடிப்படை முறையில் வழங்கப்படும் காணிகளில் மேலதிக காணிகள் அதனுடன் சேர்த்து சிரமதானம் செய்வதாக பிரதேச பொது அமைப்புகள் குற்றம் சாட்டிய நிலையில் , கேட்கப்பட்ட அளவை விட மேலதிக காணி சிரமதானம் செய்து வைத்திருப்போராயின் , பிரதேச செயலகம் அதனை கையகப்படுத்தி அந்த பகுதிகளில் வயற்காணிகள் அற்று வசிப்போருக்கு வழங்குமாறும் அவ்வாறு அத்துமீறல் செயற்பாட்டை செய்பவரின் குத்தகையை ரத்து செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது

இதேவேளை மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் 50 வீட்டு ½ ஏக்கர் திட்ட பகுதிகளில் காடழிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் , இந்திய அரசின் நிதியுதவியில் வழங்கப்பட்ட வீட்டு திட்டத்தில் ½ ஏக்கர் வீதமே மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் பகலில் காடழிப்பு சம்பவங்களும் இரவு நேரங்களில் குறித்த பற்றை காடுகளை நெருப்பு வைத்து அழிக்கும் சம்பவங்களும் காணப்படுவதாக அந்த பகுதி மக்கள் கிராம அலுவலரிடம் முறையிட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் , தற்போதும் காடழிப்பு இடம்பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

மாந்தை கிழக்கு பகுதிகளில் பலர் வயல் காணியற்று காணப்படும் நிலையில் உரிய அதிகாரிகள் பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற நிலையில் தலையிட்டு மக்களுக்கு உதவுமாறும் பிரதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன

மறுமொழி இடவும்