மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்!

மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தவர்கள் அனைவரும் மௌன ஆர்ப்பாட்டத்துடன் கூடிய கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர்

கடந்த 10.12.2020 அன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலரின் உத்தியோக தங்குமிட விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றிருந்தது

“அரச அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்து”
“பறிக்காதே பறிக்காதே அரச ஊழியர்களின் பாதுகாப்பை பறிக்காதே”
“நினைக்காதே நினைக்காதே கல்லெறிந்து காரியம் சாதிக்க நினைக்காதே” போன்ற எதிர்ப்பு வாசக அட்டைகளுடன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்

இதே வேளை குறிதத பிரதேச செயலகத்தில் வெளிமாவட்டத்தினை சேர்ந்த அதிகளவான ஊழியர்களே தங்கி நின்று கடமையாற்றும் நிலையில் தங்குமிட விடுதி மீதான தாக்குதல் அச்ச உணர்வை தங்கள் ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளதாகவும், தெரிவிக்கின்றனர்

மறுமொழி இடவும்