தொப்புள் கொடிகளை அறுக்க சதி?

இந்திய இலங்கை மீனவர்களிடையே தமது முகவர்கள் ஊடக மோதல்களை தோற்றுவிக்க யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகம் மும்முரமாகியிருக்கின்றது.

இலங்கை கடற்படையால் வேட்டையாடப்படும் இந்திய மீனவர்களிற்கு எதிராக கடற்தொழில் சமூகத்தினர் சார்பில் சட்டத்தரணிகளை களமிறக்க இந்திய துணைதூதரகம் தூண்டிவருகின்றதென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அ,அன்னராசா சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள இழுவைமடி தொழிலை நிறுத்த வேண்டும். நிறுத்த தவறும் பட்சத்தில் தொப்புள் கொடி உறவாகிய தமிழ்நாடு ஆக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி நாங்கள் இனியும் பொறுத்திருக்க மாட்டோம் . நாங்கள் எதிர்காலத்தில் கடற்தொழில் சமூகமம் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக கடற்தொழிலாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளை வைத்து நீதிமன்றங்களிலே வழக்காட தயாராக இருக்கின்றோம்.

எதிர்காலத்தில் வட க்கு கடற்தொழிலாளர் சமூகமும் சட்ட நடவடிக்கைக்கு ஆதரவாக நீதிமன்றத்திலே எதிர் தரப்பாக களமிறங்குவதற்கு அதாவது சட்டத்தரணி ஊடாக களம் இறங்குவதற்கு நாங்கள் தயாராகி வருகின்றோம்

எமது எமது கடற்பரப்பில் சட்டவிரோத தொழில் செய்பவர்களுக்கு எதிராக கடற்தொழில் சமூகத்தினர் சார்பில் சட்டத்தரணிகளை களமிறங்கி கைதாகும் இந்தியமீனவர்களுக்கு எதிராகநீதிமன்றங்களில் வாதாட வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்