ஜனாதிபதி தேர்தல்: ஈழத்தமிழர்களிடம் வைகோ முக்கிய வேண்டுகோள்!

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழ் இனத்தின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு ஈழத்தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை அறிந்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எனவே, வாக்குச் சாவடிக்குப் போகும் முன்பு, ஈழத் தமிழ் வாக்காளர்கள், தமிழ் இனத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு வாக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்