என்கவுண்டர் விவகாரம் : தன்னையும் கொன்றுவிடுங்கள் என கர்ப்பிணி பெண் கோரிக்கை!

பாலியல் வன்புணர்விற்கு பின் படுகொலை செய்யப்பட்ட பிரியங்கா ரெட்டியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட சின்னகேசவலு என்பவரின் கர்ப்பிணி மனைவி தன்னையும் கொன்று விடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் குறித்த பெண் நேற்றைய தினம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.

தன் கணவன் இன்றி தன்னால் வாழ முடியாது எனத் தெரிவித்துள்ள குறித்த பெண், சின்னகேசவலுவின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்