சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து ஐ.நா குழு ஆய்வு நடத்தும்?

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு இன்று கொழும்பு வரவுள்ள நிலையில், இந்தக் குழுவில் உள்ள நிபுணர்கள் சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குச் நுழைய அனுமதி கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையிலேயே, சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து பார்வையிடுவதற்கு ஐ.நா நிபுணர் குழு முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு முதல் முறையாக சிறிலங்காவுக்கு இன்று வரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 12ஆம் நாள் வரை சிறிலங்காவில் […]

அரசிற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள கூட்டமைப்பினர் தயாரா ?

அரசாங்கம் ஏமாற்றுகிறது அல்லது பொய் கூறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின்; அரசாங்கத்திற்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க வேண்டுமெனக் கேள்வி எழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவருமான அனந்தி சசிதரன் அரசிற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள கூட்டமைப்பினர் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் விடயத்தில் மட்டுமல்ல பொறுப்புக்கள் அனைத்திலும் தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை […]

சிறிலங்கா படையினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் – அவுஸ்ரேலியா

சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள அவுஸ்ரேலிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான HMAS Canberra வில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவுஸ்ரேலிய பதில் தூதுவர் ஜோன் பிலிப் இதனைத் தெரிவித்துள்ளார். ”உள்நாட்டுப் போரின் போது மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா படையினருடன் இணைந்து செயற்படுவதற்கு அவுஸ்ரேலிய ஆயுதப்படைகளுக்கு எந்த தயக்கமும் இல்லை. நாங்கள் சிறிலங்கா […]

சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளியே!

தன்னிடம் போர்க்குற்ற ஆதரங்கள் இருப்பதாகக்க கூறிவரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளியே எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அந்த அந்த ஆதாரங்களை வெளிப்படுத்தவோ போர்க்குற்றம் என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பொன்சேகா தயாராக இருக்கமாட்டார் என்றும் அவர் தனது அரசியலுக்காக மட்டுமே இவ்வாறு கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று (29) கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு […]

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழு சிறிலங்கா வருகிறது

சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு அடுத்தவாரம் சிறிலங்காவுக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. ஏப்ரல் 2ஆம் நாள் தொடக்கம், 12 ஆம் நாள் வரை இந்தக் குழு சிறிலங்காவில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் சித்திரவதைக்கு எதிரான மற்றும் மோசமான நடத்தைக்கு எதிரான பாதுகாப்பு குறித்து இந்தக் குழு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. நான்கு பேர் கொண்ட ஐ.நா உபகுழு இந்தப் பயணத்தின் போது, அரசாங்க அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகளுடனும் […]

சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களுடன் மாணவன் கைது!

சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த கல்லூரி மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்த செல்லும் விமானத்தில் இருந்த கல்லூரி மாணவர் வைத்திருந்த பெட்டியிலேயே இந்த அரிய வகை உயிரினங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது அதில் ஹார்ன்ட் பிட் வைபர் எனும் கொடிய விஷமுள்ள பாம்பு, உடும்பு, எகிப்திய ஆமைகள், விஷ அரணை, எறும்புத்திண்ணி ஆகியவை இருந்துள்ளன. அதேநேரம் இவை 34 வகையான கொடிய உயிரினங்கள் என […]

இந்திய மீனவர்கள் 11பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!

நெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களது மூன்று படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பதினொரு மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திய பின்னர் யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஒப்படைத்தனர். நீரியல் வளத்துறையினர் குறித்த மீனவர்களுக்கு எதிராக எல்லை தாண்டிய குற்ற வழக்குப் பதிவுசெய்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இனி நாடு பிளவுபடும்:சிறீகாந்தா மிரட்டல்!

மீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான பண்பு அல்லவென டெலோஅமைப்பின் செயலாளர் நாயகம் சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது பற்றி கருத்து தெரிவித்த அவர் தமிழர் தரப்பு கலப்பு பொறிமுறை பற்றி பேசக்கூடாதென தெற்கு எதிர்பார்ப்பது அதுவும் மிரட்டல் அரசியல் தமிழ் மக்களது விடுதலைப்போராட்டத்தின் முன்னாள் தூசு எனவும் அவர் தெரிவித்தார். டிலான் பெரேரா போன்று மீண்டுமொரு கறுப்பு ஜீலை நிராயுதபாணியான தமிழ் மக்களின் […]

சுமந்திரனும் சுத்துமாத்து ஐ.நாவும் சுத்துமாத்துத்தான்

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் செயற்பாடு தமிழா்களுக்கு பாாிய தோல்வியை கொடுத்துள்ளதாக கூறியிருக்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தமிழா்கள் நீதியை எதிா்பாா்க்கும் அவலம் குறித்து ஐ.நா மனித உாிமைகள் ஆணையகம் சிந்திக்கமறந்துள்ளதாகவும் கூறியுள்ளாா். யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அவா் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்று பத்து ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் நாம் இருக்கின்றோம். ஐக்கிய நாடுகள் மனித […]

36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு

வரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நுழைவிசைவு கட்டணம் இன்றி இந்த நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த திட்டம் […]

சீன போர்க்கப்பலை பொறுப்பேற்க 110 சிறிலங்கா கடற்படையினர் பீஜிங் பயணம்

சிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கவுள்ள போர்க்கப்பலில் பணியாற்றுவதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காக, 110 சிறிலங்கா கடற்படையினர் சீனாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் இவர்கள் சீனாவுக்குப் புறப்படவுள்ளதாக, சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சிறிலங்கா கடற்படையிடம், இந்தப் போர்க்கப்பல் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 அதிகாரிகள் மற்றும் 92 கடற்படையினர் இந்தக் கப்பலைப் பொறுப்பேற்று சிறிலங்காவுக்குக் கொண்டு வரவுள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படையில், 2015ஆம் ஆண்டு வரை, ‘Tongling’ என்ற […]

கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணையாம் – சுத்துமாத்து சுமந்திரன்

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், “சிறிலங்காவின் நீதிச் செயல்முறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனிவாவில் உரையாற்றியமை ஏமாற்றம் அளிக்கிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக் […]