சவேந்திரசில்வாவின் பதவியை மீளாய்வு செய்ய கோரும் அனந்தி!

நூற்றுக்கணக்கான குழந்தைகள் பசியோடு வரிசையில் நின்ற போது மல்ரிபரல் செல் அடித்து நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொன்ற குற்றவாளியும், இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகவும் சவேந்திர சில்வாவே இருந்துள்ளார். இது தொடர்பான நேரடியான சாட்சியங்களும் உள்ளன எனத் தெரிவித்துள்ள ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவரும், முன்னாள் வடமாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தமிழ்மக்களுடைய மனங்களை ஜனாதிபதி வெல்ல வேண்டுமாயின் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக […]

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா!

சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று முதல் இவர் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 1984ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்தவர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய இவர், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவாக இருந்த, 53 ஆவது டிவிசனின், வான்வழி நகர்வுப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், […]