ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லத் தொடங்கியுள்ளனர். நேற்று மாலை முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இத்தேகந்தே சத்ததிஸ்ஸ தேரர் ஹொங்கொங் நோக்கி பயணமாகியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவியான லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் இன்று காலை 03.30 மணியளவில் டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க […]
Author: இலக்கியன்
சொந்த தொகுதியில் மக்களால் தூக்கி எறியப்பட்ட ராஜபக்சர்கள் !
நாமல் ராஜபக்சவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பெலியத்தை தேர்தல் தொகுதியில் அவர் படுதோல்வியடைந்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் தேர்தல் தொகுதியும், ராஜபக்ச குடும்பத்தின் பரம்பரை தொகுதியுமான பெலியத்தையில் அனுரகுமார திசாநாயக்க பாரிய வெற்றியீட்டியுள்ளார். அவர் 34,320 வாக்குகளைப் பெற்று 53.43 வீத வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளார். இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள சஜித் பிரேமதாச 16,820 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 5,460 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். வெறுமனே 5385 வாக்குகளுடன் நாமல் தனது […]
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரிய சிங்கள பொலிசார் – மறுத்த நீதிமன்றம்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ். நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீதான விசாரணை நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற போது, 2011ஆம் ஆண்டு புலி சின்னங்களை பயன்படுத்த தடை விதித்தே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதில் இறந்தோரை நினைவேந்தல் நடத்த தடை விதிக்கப்படவில்லை. கடந்த 13 […]
புலிகள் மீதான தடை – வைகோ தாக்கல் செய்த மனுவை தீர்பாயம் ஏற்றது!
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக இந்திய ஒன்றிய அரசு விதித்துள்ள தடையை இரத்து செய்ய வேண்டும் என கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவை டெல்லி தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது குறித்து மதிமுக தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) படி, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மே 14ஆம் திகதி அன்று மேலும் […]
தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன்
தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார். சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை கூடி தமிழ் பொது வேட்பாளரை அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி […]
பிரித்தானியத் தேர்தல்: ஈழத் தமிழ்ப் பெண் உமா குமரன் வெற்றி பெற்றார்!!
பிரித்தானியாத் தேர்தலில் ஈழத் தமிழ் பின்ணணியை கொண்ட உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார். ஸ்டிரபோர்ட் அன்ட் போவின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் அவர் 19 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்தொகுதியில் கிறீன்ஸ் கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர் 7 ஆயிரத்து 511 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த வெற்றிமூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது ஈழத் தமிழ் பின்னணிகொண்ட பெண் என்ற பெருமை […]
கஜேந்திரகுமாருக்கு 3 மாத விடுமுறை: பாராளுமன்றம் அனுமதி !!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது . தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஜூலை […]
பொது வேட்பாளருக்கு ஆதரவு!
பொது வேட்பாளராக சரியான ஒருவரை நியமித்தால் தாம் பூரண ஆதரவு வழங்குவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோ.கனகரஞ்சி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். அந்த மாவட்ட த்திற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்திற்கு முன்பாக A9 வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (30) காலை10மணி முதல் அரை மணித்தியாலங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நீதி வேண்டும் என்ற […]
யாழில் கட்டாயப்படுத்தப்பட்டு மதம் மாற்றப்படும் பேரினவாத சிங்கள பொலிசில் இருக்கும் தமிழ் இளையோர்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை குமார கோவில் வளாகத்தில் கெமுனு விகாரை அமைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் குமார கோவில் இருந்தவேளை, ஆலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் கெமுனு விகாரை எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டது. தற்போது குறித்த பகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மீள்குடியேறி குமார கோவிலில் பூஜை வழிபாடுகளில் […]
இஸ்ரேல் இராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும்: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
ஐ.நாவின் உயர் நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கியது. காசா நிலப்பரப்பில் எகிப்து எல்லை நகரான ரஃபா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. காசாவின் நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலுக்கு நீதிமன்றம் கடந்தமுறை உத்தரவிட்டதிலிருந்து நிலைமை மோசமடைந்துள்ளது என சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நவாப் சலாம் கூறினார். காசாவில் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களால் இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது […]
புலிகள் மீதான தடை-இந்தியாவில் போராட்டம்!
இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்தும் உலக தமிழர் நன்மைக்காகவும் விரைவில் தமிழர் கட்சி முன்னெடுக்கும்ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் ஒரு பகுதியை இந்திய யூனியனிலிருந்து பிரிக்க விடுதலைப்புலிகள் முயற்சி செய்வதாக பொய் குற்றச்சாட்டை இந்தியா முன்வைக்கிறது. தமிழர்களே! தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் முகத்திரையை கிழிப்போம்.! கோரிக்கை : 1… தங்கள் தேச விடுதலைக்காக போராடிய இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு எதிரான பொய்யான / கர்பனையான செய்திகளை கூறி விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்ததை ரத்து செய். 2.. […]
இஸ்ரேலுக்கு ஒரு நியாயம்..இலங்கைக்கு ஒரு நியாயமா? சிங்களவர்களுக்கு தண்டனை தரணும்.. அன்புமணி கோரிக்கை
போர்க்குற்ற விசாரணையில் இஸ்ரேலுக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், போர்க் குற்றத்திற்காக சிங்கள ஆட்சியாளர்களையும் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போரில் 35 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான இஸ்ரேல் ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு, விசாரணைகள் தொடங்கியுள்ளன. பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நீதி வழங்க […]