நாட்டை விட்டு தப்பியோடும் மகிந்த ராஜபக்ஷ தரப்பினர்!

ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இத்தேகந்தே சத்ததிஸ்ஸ தேரர் ஹொங்கொங் நோக்கி பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவியான லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் இன்று காலை 03.30 மணியளவில் டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால் துபாய் வழியாக அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பசில் ராஜபக்ச, ஐதேக பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரநாயக்க ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்