அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் அங்கீகரித்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை நீடித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழுக்கு அனுமதி அளிக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவசரகாலச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் அதனை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்தார். இந்த விவாதத்தை அடுத்து நேற்று மாலை சபையில் […]
Category: செய்திகள்
இந்தியா ஒரு நாடே அல்ல! “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.
இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு “United States of India” என மதிமுக பொதுசெயலர் வைகோ இன்று மாலை மாநிலங்களவையில் துணிச்சலான முழக்கத்தை எழுப்பியுள்ளார். தேசிய புலனாய்வு முகவை (NIA) திருத்த சட்டம் தொடர்பில் மாநிலங்களவையில் இடம்பெற்ற வாததின்போதே அதை எதிர்த்து பேசும்போதே இவ்வாறு கூறியுள்ளார். “இது ஒரு இனம், ஒரு கலாச்சாரம், ஒரு தேசம் என அமைந்த நாடு அல்ல.., இது பல தேசிய இனங்களை, பல மொழிகளை, பல கலாச்சாரங்களை […]
பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன!
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கலாம், பொதுஐன […]
பசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் பசில் ராஜபக்சவுடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டார் என சில தரப்புக்கள் கூறிவரும் நிலையில், விக்கினேஸ்வரன் அதை அடியோடு மறுத்துள்ளார். பசில் ராஜபக்சவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கொழும்பு ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய விசேட செவ்வியில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சி.வி.விக்னேஸ்வரன், பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்குச் சென்று பசில் ராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் […]
தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..!
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர். இன்று இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா கருத்து […]
ஈபிடிபி கைவிடுகின்றது?
மாநகர முதல்வா் இமானுவேல் ஆனல்டிற்கு எதிராக நம்பிக்கையில்ல தீா்மானம் ஒன்றை நிறைவேற்ற முனைப்பு காட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி 26 உறுப்பினா்கள் தப்போது ஆதரவு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் ஈபிடிபி இன்று மதியம் ஊடகங்களிற்கு வெளிப்படுத்த யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துகின்றது. யாழ்.மாநகரசபையினால் சிமாட் போல் கம்பம் அமைக்கப்பட்டுவரும் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. சிமாட் போல் கம்பங்களில் 5G பொருத்தப்படவுள்ளதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் […]
தமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை!
தழிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் விக்னேஸ்வரனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வலுவான கருத்துநிலை உருவாகியுள்ள இன்றைய சூழலில் எமக்கும் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பின்னடைவை சந்தித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகள் தொடர்பில் எமது மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை கருதி எமது தரப்பு நியாயத்தை இவ் ஊடக அறிக்கை மூலமாக முன்வைக்க விரும்புகின்றோம். எமது மக்களின் விருப்புக்கு அமைவாக […]
கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (05) மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளையினை சேர்ந்த 45 வயயுடைய சண்முகநாதன் சத்தியபவான் என்ற குடும்பஸ்தர் காஞ்சிரமோட்டையில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவரது விவசாய கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அருகில் உள்ள விவசாயிகள் முள்ளியவளை பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை முள்ளியவளை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை மீட்டு மாஞ்சோலை […]
அதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி
2019 அதிபர் தேர்தல் முடிவடையும் வரை, அமெரிக்காவுடனான சோபா உடன்பாடு குறித்த இறுதி முடிவை தாமதிக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு என, அவரது சார்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ‘மிலேனியம் சவால் நிதிய உடன்பாடும் கூட, அதிபர் தேர்தல் நடத்தப்படும் வரை தாமதிக்க வேண்டும். தற்போது செய்து கொள்ளப்பட்டுள்ள கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு செவைகள் உடன்பாட்டை பின்பற்ற […]
தவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்!
சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில். ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் பற்றி வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்த மனுக்களின் தொகுப்புபை புத்தகமாகி வெளியிட்டுபேசியிருந்தார்/ இதில் வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளைப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு தேச துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது.அதன் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது காலை 10.40க்கு நீதிபதியின் […]
அமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியிடம் விசாரணை!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் மனைவியான கிதெர் மொஹமட் சஹாப்தீன் ஆயிசா தொடர்பாக, நிதிமோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் நிதிபரிமாற்றம் இடம்பெற்றமை தொடர்பாக இந்த விசாரணை இடம்பெறுவதாக, நிதிமோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்தது. மத்தியவங்கியின் புலனாய்வுப் பிரிவு வழங்கிய முறைப்பாடு ஒன்றுக்கு அமைய இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. கொழும்பு 7, […]
அமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர
அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து, வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்க – சிறிலங்கா இராணுவ உறவுகளுக்கு எதிராக பரப்புரை செய்பவர்களில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற அரசியல்வாதிகளும் உள்ளனர். அமெரிக்காவுடன் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு, சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் உடன்பாடு ஆகியவற்றில் கைச்சாத்திடக் கூடாது என விமல் வீரவன்ச தலைமையிலான […]











