மட்டக்களப்பு – ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட் குச்சிகளும், 1000 டெட்டர்நேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வெடிபொருட்களை இன்று (வியாழக்கிழமை) மாலை சி.ஜ.டி.யினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காத்தான்குடியில் தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆயுதப்பிரிவு தலைவர் மொஹமட் மிலான் என்ற பயங்கரவாதி வழங்கிய தகவலுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 40 வயதான குறித்த நபர் சவுதியில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள்
கூட்டணியும்-முன்னணியும் ஒன்றிணைவது சாத்தியமற்றதா?
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் கூட்டணியும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் பலத்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது.. ‘கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானமேறி வைகுண்டம் போவேன் என்று சொன்னதுபோல்’, தமிழ் மக்களுக்கு இந்த ஆண்டு தீர்வு வருகின்றது, அடுத்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு வந்தே தீரும்புதிய அரசியல் சீர்திருத்தம் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்று அடித்துக்கூறி,கடந்த பத்து […]
முன்னாள் போராளிகளை இலக்கு வைக்கிறார் ரணிலும்?
அனுராதபுரம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான சுலக்சன் மற்றும் திருவருள் உள்ளிட்டோரை விடதலைப்புலிகளின் போர்க்குற்றங்கள் வகைப்படுத்தலில் சிக்கவைக்க அரசு மும்முரமாகியுள்ளது.இதற்கேதுவாக கைதாகி விடுவிக்கப்பட்ட மலையகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை சட்டமா அதிபர் திணைக்களம் தயார் செய்து அழைத்து வந்துள்ளது. வன்னியில் இருந்த வேளை விடுதலைப்புலிகளால் சந்தேகத்தில் கைதாகி பின்னர் இறுதி யுத்த காலத்தில் தப்பித்து சென்ற குறித்த நபரை தயார் செய்து முன்னாள் போராளிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இதனிடையே மரம் வெட்டும் வேலைக்கு […]
இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் சிக்கியது – பெருமளவு சாதனங்கள் மீட்பு
கடுவல பகுதியில் மிக இரகசியமாக இயங்கிவந்த தொலைத்தொடா்பு நிலையம் முற்றுகையிடப்பட்டு பெருமளவு தொலைத் தொடாபு உபகரணங்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. கடுவலைப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணொருவர் இரகசியமாக நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையத்தை இன்று மாலை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த இடத்திலிருந்து இரண்டாயிரம் சிம் அட்டைகள் , கையடக்கத்தொலைபேசிகள் , கணினிகள் என்பனவற்றை மீட்டுள்ளனர்இதன் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் […]
தற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாரதி வீதியில் உள்ள மயானத்தில் சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடலைப் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். குறித்த பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடலைப் புதைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். வீதிகளில் டயர்களை எரித்தும் வீதிகளை மறித்தும் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. கடந்த […]
பிரபாகரனுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்கீம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் மத்தியிலிருந்து பிரபாகரன் உருவாக இடமளிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று. இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழீழ விடுதலைப்புலிகளின் […]
கொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு!
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 6.20 மணியளவில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சன்ஹில் ஹோட்டலுக்கு அருகில் உள்ள புகையிரத பாதையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயிலுடனேயே குறித்த மூவரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் கூறும் 22 பேர் மாத்திரமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதுடன் வேறு எவரும் போட்டியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அஸ்கிரிய மகா நாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனிடையே, பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் விலகிமை குறித்தும், 83ஆம் ஆண்டு கலவரத்திற்குப் பின்னர் […]
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. ஆகவே எந்த இடத்திலும் எவரையும் நான் குற்றம் கூறுவதாக இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி . விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்ட அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் நீங்கள் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட தயார் என எழுதிய கடிதத்தை அவர்கள் […]
கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சற்று முன்னர், இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். இந்தியப் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து […]
பாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்!
புழல் மட்டும் சிறை அல்ல, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியாத, ஒட்டு மொத்த தமிழ்நாடும் சிறைச்சாலை தான் என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக 10ம் ஆண்டு தமிழ்னப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு சென்னை தமிழர் கடலில் ( மெரினா) அனுமதி மறுக்கப்பட்டதனால் சேப்பாக்கம் மைதானம் அருகில் பேரணியோடு நினைவேந்தல் கூட்டமும் நடைபெற்றது. பாலச்சந்திரன் படம் தாங்கிய ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்திருந்தனர் இங்கு உரையாற்றிய […]
விக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா?
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய பொதுக்கூட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி எனும் பெயரில் புதுக் கட்சி ஒன்றினை ஆரம்பித்திருந்தார். அதனையடுத்து புதிய கூட்டணி ஒன்று அமைப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்திருந்தன. சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அமைப்பினை புதிய அரசியல் கூட்டில் விக்கினேஸ்வரன் இணைத்துக்கொண்டால் தாம் அந்தக் […]












