ஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த உண்மைகளை எமது மக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், போர் முடிவடைந்ததற்கு பிற்பாடு தமிழ்த் தேசம் தன்னுடைய இருப்பிற்காகக் போராடிக்கொண்டிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த […]
Category: செய்திகள்
இந்துகளுக்கு எதிராக கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் அமைச்சர் அதிரடியாக பதவி நீக்கம்!
இந்துகளுக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்ட பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநில தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சர் ஃபாயஸ் உல் ஹாசன் சோஹன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில முதல்வரின் செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாளர் ஷபாஸ் கில், ”இந்நிகழ்வு துரதிருஷ்டவசமானது. சோஹன் சொன்ன கருத்தில் இருந்து பஞ்சாப் அரசு விலகி நிற்கிறது. அது பஞ்சாப் அரசின் கருத்தல்ல. இந்துக்கள் உட்பட எந்த சிறுபான்மையினரையும் அவமதிக்கும், […]
கோத்தபாயவை சிக்கவைத்தார் முன்னாள் கடற்படை தளபதி!
பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் இந்த விவகாரத்தில் சிக்கவைத்துள்ளார் வசந்தகரணாகொட தான் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறிப்பிட்ட மனுவில் அவர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இந்த விவகாரம் குறித்து தெரியும் என குறிப்பிட்டுள்ளார். 11 தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட விடயம்எவ்வாறு இடம்பெற்றது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி தன்மீதான […]
1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக – மதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது!
திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக வேகமாக செயல்பட்டு தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. முதலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுணக்கம் காட்டிய திமுக தற்போது அடித்து ஆட தொடங்கி உள்ளது. தமிழகத்தில் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளை எல்லாம் தனது பக்கம் இழுத்து கூட்டணி அமைத்து […]
புதிய அரசியலமைப்பை முயற்சியை தமிழ்த் தேசம் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும்!
புதிய அரசியலமைப்புக்கான முயற்சியை தமிழ்த்தேசம் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-“தமிழ்த் தேசத்திற்குள் இருக்கும் அனைத்து மக்களும் முழுமையாக விடுதலை அடையக்கூடிய வகையில், நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோளாக இருந்தது. சிங்கள தேசத்தின் எமது இனத்திற்கெதிரான […]
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் இலக்கத் தகடுகள் மீட்பு
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயம் ஒன்றை துப்புரவு செய்யும் போது அங்கி ருந்து தமிழீழ விடுதலை புலிகளின் அடையாள தகடுகள் பெருமளவில் மீட்கப்பட்டுள் ளதாக மக்கள் கூறுகின்றனா். இது குறித்து மேலும் தொியவருவதாவது, வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டி ற்காக நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக் களினால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது குறித்த ஆலயவளாக பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் 25 வெவ் வேறு இலக்கங்களுடனான தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்காலி ல் இறுதிபோர் […]
பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றின் உத்தரவு!
புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த செயலானது இலங்கை ராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமையுடன் தொடர்புடையதல்ல என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதி எமா ஆபத்நொட், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை செல்லுபடியாகாது என இன்று அறிவித்திருக்கின்றார். ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை இருப்பதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக […]
ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்க முன்வர வேண்டும் – யாழில் போராட்டம்!
ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா முன்வர வேண்டும் என வலியுறுத்தி யாழில் இன்று ஆலய வழிபாடுகளும் கையெழுத்து போராட்டமும் நடைபெற்றன. வலிந்தும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் வவுனியா மாவட்ட சங்கத்தினர் வடக்கு, கிழக்கு ரீதியாக மூன்று இலட்சம் கையெழுத்துக்களைப் பெறும் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். கடந்த சில நாட்களில் முப்பதாயிரம் கையெழுத்துக்களை பெற்றுள்ள நிலையில் மேலும் கையெழுத்துக்களைம் பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக இன்று யாழ்ப்பாணம் வந்த மேற்படி சங்கத்தினர் யாழ் கோட்டைக்கு அருகிலுள்ள முனியப்பர் ஆலயத்தில் […]
மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறவேண்டும் – இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்து!
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்கூற வேண்டும் என ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பியோனாலா நி ஆலோன் குறிப்பிட்டார். மேலும் இதன்போது, நியாயமான விசாரணை, சித்திரவதை குற்றச்சாட்டுகள், மனிதநேயமற்ற மற்றும் இழிவுபடுத்தும் […]
தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணை அங்கீகரிக்க வேண்டும்!
ஐநா மனிதவுரிமை பேரவையின் 40. அமர்வை முன்னிட்டு சிறிலங்கா அரசின் விடயமாக தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள் கடந்த வாரம் யெனிவாவில் உள்ள பல ஐநா அங்கத்துவ நாடுகளின் தூதரகங்களுடன் முக்கிய உயர்சந்திப்புகளை மேற்கொண்டு பன்னாட்டு சுயாதீன விசாரணை ஒன்றே தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை பெற்றுத்தரும் எனவும், இம்முறை சிறிலங்கா அரசுக்கு இணைநாடுகள் மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் கொடுக்கும் செய்திகள் வலுப்பெறும் நிலையில் , இது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தையும் […]
வெல்லும் வரை பயணிப்போம்..!
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஒன்பதாம் நாளாக இன்று 26/02/2019 பாசெல் மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் சொலர்தூன் மாநகர சபை முதல்வரைசந்தித்து மனுக்கொடுத்து பிற்பகல் 17.00 மணிக்கு மக்களையும் சந்தித்து நிறைவுக்கு வந்தது.நாளை 27/02/2019. காலை சொலர்தூன் நகரிலிருந்து ஆரம்பித்து பி.பகல் 16.00மணியளவில் சுவிஸ் பேர்ன் மாநகரை சென்றடையவுள்ளது.
தமிழர் வரலாற்றையும் – தமிழீழ அரசின் வரலாற்றையும் பாதுகாப்போம்.
தமிழர் வரலாற்றை மீண்டும் புதுப்பித்த விடுதலை இயக்கத்தின் வரலாற்றை அழிக்கும் சிங்கள அரசின் புலி நீக்க அரசியலின் முக்கிய பகுதியாக எமது விடுதலை இயக்கமாகிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் -போராட்ட வரலாறுகள் என்பன திட்டமிட்ட வகையில் மிக விரைவாக அழிக்க பல முயற்சிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஓலைச்சுவடிகள் அழிப்பில் தொடங்கி யாழ்நூலகம் எரிக்கப்பட்ட பின்னரும் தமிழர் வரலாறு அழிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. இதைக் கருத்திற் கொண்டுதான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் […]












